பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

குறிப்பிட்டிருப்பதும், திருஞானசம்பந்தர் காலத்தில், சிவபெரு 8ான் கோவில்களில் செந்தமிழ் மொழியிலும், வடமொழியி லும் அர்ச்சனைகள் நடைபெற்றன என்று எழுதப்பட்டிருப்பதும் இந்த நூலின் சிறப்பியல்புகளாகக் குறிப்பிடத்தக்கவை என்று கூறுவது மிகை ஆகாது.

இந்நூலுக்குத் திருவுளம் உவந்து பாராட்டுரை எழுதி யருளிய காஞ்சிபுரம் தொண்டைமண்டலாதீன குருமகன் சந்நிதானம் நீலறுநீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாசிய சுவாமிகளின் திருவடிகளுக்கு என் பணிவன்போடு கூடிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நூல் எழுதிச் சிலவ: ண்டுகள் ஆகியும் இதனை வெளியிடும் வாய்ப்புப் பெருது இருந்த நிலையில், அருள் உளமும், சைவசமயப் பற்றும் கொண்ட உயர் சைவத் திருவாளர் கே. இ. அருணுசலம், எம் ஏ , பி. காம், (டிசனேஜர் தாராப்பூர் லோகநாத முதலியார் கம்பெனி) அவர்களே அண்மி இந்நூலே வெளியிடுமாறு வேண்டிக் கொண்ட போது, அவர்களும், அவர்களின் உறவினர்களான திருமதி கே. சரஸ்வதி, லோகநாதன், திரு. ,ே ட். ராஜசேகரன், திரு. ,ே ட், ரவிசந்திரன், திருமதி K. ராஜேஸ்வரி அருளுசலம் ஆகியோரும் தங்கள் பொருள் செலவில் இதனை வெளியிட முன் வந்தமைக்கு, யான் என்ன கைம் மாறு செய்ய இயலும் ? அவர்களுக்கெல்லாம் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதைத் தவிர்த்து வேருென்றும் அறியேன். அவர்கள் யாவரும் நீடுழி வாழத் திருவருள் புரிய முக்கண் மூர்த்தியின் முளரித் தாள்களைப் போற்றுகின்றேன் -

இந்நூலையும் ஏனைய நூல்களையும் எழுத நல் அறிவை யும், ஆற்றலையும் அளித்துக் கொண்டே இருக்கும் யான் வழிபடும் முழுமுதற் பரம்பொருளாம் அம்மை அப்பருடைய பொன்னர் திருவடிகளே வந்தித்து வாழ்த்தி வணங்கு கின்றேன், 'அம்மை அப்பர் அகம்') 43, விசயவிக்னேசுவரர் இங்ஙனம்,

கோவில் தெரு, }. சூளை, சென்னே-7, ! 23–? —” & 3. 月

பாலுர் கண்ணப்ப முதலியார்.