பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல். சிவமயம் திருச்சிற்றம்பலம் காஞ்சி தொண்டைமண்டலம் ஆதீனம் நீலழி ஞானப்பிரகாச பரமாசாசிய சுவாமிகளின்

பாராட்டுரை

திரு. பேராசிரியர் புலவர் பாலூர் கண்ணப்ப முதலியார், M. A., B.01., அவர்கள் சைவத்தில் அழுந்திய உள்ளத்தவர். வழுக்கி விழினும் சிவபிரான் திருப்பெயர் அல்லாமல் மற். ருென்றும் அறியாதவர். நீற்றினே நிறையப்பூசி, நித்தலும் தி.மஞ் செய்துவக்கும் நெறிவழாதவர். சமய நூல்களிலும் இலக்கண இலக்கிய நூல்களிலும் புலமை மிக்கவர் சொல். லசற்றலும், எழுத்தாற்றலும் வாய்க்கப் பெற்றவர். இந்த உண்மைகளே இவருடைய சொற்பொழிவுகளைச் செவிமடுத்த வர்களும், இவருடைய நூல்களைப் படித்தவர்களும் நன்கு அறிவர். இவரது ஆராய்ச்சிப் புலமையினே, இவர் எழுதியுள்ள பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்னும் நூலும், உரை எழுதும் சிறப்பினைச் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பெருவிளக்க உரை (800 பக்கம் கொண்டது) தமிழ் மந்திரம் உரை, ஈங்கோய் மலை எழுபது உரை, திருவெம்பாவை, திருப் பாவை. திருப்பள்ளி எழுச்சி உரை, திருவருட்பாவில் சில: பகுதிகளுக்கு உரை ஆகியவை விளக்கிக்கொண்டிருக் கின்றன. இவருடைய இலக்கிய இலக்கணப் புலமைக்குத் தமீழ்நூல் வரலாறு, வள்ளுவர் கண்ட நாடு முதலான நூல் களே போதுமான சான்ருகும். இவர் பல்வேறு மலர்களுக்கு எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கற்றவர்களால் நன்கு பாராட்டப்பட் டிருக்கின்றன, இவைகளே அன்றி இவர் இகளஞர் முதல் முதியோர்வரை படித்தற்கான பல்வேறு துறைகளிலும் பல நூல்கள் எழுதியவர். எவரையும், எதையும் வெருத் போதுமைப் பண்பு வாய்ந்தவர், சைவத்திற்கும், தமிழுக்கும் வாழ்நாள் முழுதும் உழைத்து வருபவருமாகிய இப் பேரறிஞர் எழுதியுள்ள தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள் என்னும் நூலைப் படித்துப்பார்த்தோம். இஃது ஒரு தனிச் சிறப்புடைய நூலே ஆகும். - -

தல வரலாறுகளைப் பற்றிய வரலாற்று நூல்கள் பல வெளி வந்துள்ளன, அவற்றுள் அவ்வத் தலங்களைப் பற்றிய குறிப்புகளும், அத்தலங்களில் சமயாசசரியர்கள் பாடிய பாடல்