உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

சொல் வேறுபாடுகளில் 1. சொற் சேர்க்கை 2. சொல் விடுபடல் 3. சொல் முன்பின் இடமாற்றம் 4. சொல் மாற்றம் ஆகியவை ஆராயப்பெற்றுள்ளன.

பொருள் வேறுபாடுகளில் 1. ஒரு பொருளில் வேறு சொல் 2. வேறு பொருளில் வேறு சொல் ஆகியவை பற்றிய ஆய்வு இடம்பெற்றுள்ளது.

இலக்கண வேறுபாடுகளில் 1. குறில் நெடிலாதல் 2. நெடில் குறிலாதல் 3. நெடில் இரு குறிலாதல் 4. ஒருமை பன்மையாதல் 5. பன்மை ஒருமையாதல் 6. இனவெழுத்து மயங்குதல் 7. சுட்டெழுத்துச் சேர்க்கை 8. சுட்டு விடுபடல் 9. சுட்டெழுத்து மாற்றம் 10. சுட்டுச் சொல் செய்யுளில் திரிதல் 11. வல்லினம் இரட்டித்தல் 12. உடம்படு மெய் 13. அளபெடைக் குறியீடு சேர்தல் 14. சொற்சாரியை விடுபடல் 15. வேற்றுமையுருபு சேர்த்தல் 16. வேற்றுமையுருபு விடுபடல் 17. வேற்றுமையுருபு மாற்றம் 18. தொடர்ப்பிரிப்பு 19. இடைச்சொல் சேர்த்தல் 20. இடைச்சொல் விடுபடல் 21. இடைச்சொல் இடமாற்றம் 22. இடைச்சொல் விடுபட்டு வேற்றுமையுருபு வரல் 23. சொற்சீரடி சேர்த்தல் 24. சொற்சீரடி மாற்றம் 25. போலி 28. பகர வகர மயக்கம் 27. பால் மாற்றம் 28. கால இடைநிலை மாற்றம் 29. வினையெச்சம் பெயரெச்சமாதல் ஆகியவை குறிக்கப்பெற்றுள்ளன.

ஒப்புநிலை வேறுபாடுகளில் 1. தோற்ற வொப்புமை 2. ஒலி ஒப்புமை 3. ஒலி மயக்கம் ஆகியவற்றை அமைத்துள்ளார்.

இவ்வாறு தொகுத்தெழுதியதுடன் தொல்காப்பிய மூலபாட ஆய்வு என்ற தலைப்பில் 61 பாடங்கட்கு விளக்கமாக ஆய்வுரை எழுதியுள்ளார்.

இப்பதிப்பில் மேற்கொண்ட முறை

மிகப் பெரும்பாலும் இப்பதிப்பில் மிகப் பழமையான பதிப்புகளின் மூலபாடம் ஏற்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளும் எழுத்திற்கு இளம்பூரணர் பாடமும், சொல்லிற்குச் சேனாவரையர் பாடமும், பொருளிற்கு நச்சர். பேராசிரியர் பாடமும் ஒரளவு அதிகமாக ஏற்கப்பட்டுள்ளன. எனினும் எந்த ஒரு பதிப்பையோ அல்லது சுவடியையோ அப்படியே அடிப்படையாகக் கொண்டு இங்கு நூற்பாக்கள் பெயர்த்தெழுதப் பெறவில்லை.

தொல். பதிப்புக்கள் பலவற்றோடும். டாக்டர் உ.வே.சா. நூலகத்தில் உள்ள பல சுவடிகளோடும் ஒப்பு நோக்கி, தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் என்ற கையெழுத்துப் பிரதியை முனைவர் ச.வே.சு உருவாக்கினார். அக் கையெழுத்துப் படியின் அடிப்படையில் மீண்டும் ஒப்பு நோக்கி ஒவ்வொரு நூற்பாவிலும் கண்ட வேறுபாடுகட்கு நூற்பாவில் எண்கள் கொடுக்கப்பட்டன. பிறகு அவ்வெண்ணின் கீழ் அவ்வேறுபாடு காணப்படும் இடம் சுட்டப்பெற்று சிறு