உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

நூற்பா எண்தொடர் பதிப்புக்கள்+
165 ஏவென் சாரியை ஏயென் வ.உ.சி; சுப்ப:, மழவை:, சி.வை.தா. ஏவென் சரி.
278ஏவென்னிறுதிஅடிகள். கொண்ட பாடம் ஏவென், மற்றையோர் ஏயென், ஏவென் சரி
609ஏவொடு சிவணும்அடிகள். ஏவொடு. மற்றையோர் ஏயொடு. ஏவொடு சரி.
746தெளிவினேவும்கந்த., கரந்தை., அடிகள். ஏவும்; சி.வை.தா., சர., நம., ஏயும்; ஏவும் என்பதே நேரிது.
757ஏவுங் குரையும்நம. கந்த., கரந்தை., ஆத்திரே. பதிப்புக்களில் ஏவும்; சி.வை.தா., சர., ஏயும்; ஏவும் என்பதே நேரிது.
767நன்றீற் றேவும்கந்த., கரந்தை., அடிகள்., ஆத்திரே. பதிப்புக்களில் ஏவும்; சி.வை.தா., நம., சர., ஏயும். ஏவும் என்பதே நேரிது.
775ஏவி னாகிய கந்த., அடிகள். ஏவினாகிய; சி.வை.தா., அர., கரந்தை ஏயினாகிய; ஏவினாகிய என்பதே நேரிது.
935ஈயு மேவும்ஏயும் என்றே யாவரும்; எனினும் ஏவும் என்பதே நேரிது.

+   பதிப்பு விளக்கம்:- அடிகள். - அடிகளாசிரியரின் இளம்பூரணம்; ஆத்திரே. - வேனுகோபாலனின் ஆத்திரேயம்; கந்த. - சேனாவரையம் கந்தசாமியார்; கரந்தை - தெய்வச்சிலையம்; சர. - கோவிந்தசாமியின் நச்சர், சரசுவதி மகால்; சி.வை.தா - சி.வை. தாமாதரம் பிள்ளை, சொல் சேனாவரையர், நச்சர்; சுப்ப. - சுப்பராயச் செட்டியார், எழுத்து, இளம்பூரணம் ; நம. - நமச்சிவாய முதலியார், சொல் இளம்பூரணம்; மழவை. - மகாலிங்கையர், எழுத்து நச்சர்; வ.உ.சி. - வ.உ. சிதம்பரம் பிள்ளை, இளம்பூரணம்;

(ஏ என்பது ஒரு சொல்லோடு இணைந்து தேற்றம், எண்ணுப் பொருள், அசை முதலாக வரும் போது மட்டுமே இடைச்சொல் ஆகும். எ.டு. யானே கள்வன், நிலனே நீரே, படிமையோனே. அவ்வாறன்றித் தன்னைத்தான் உணர்த்தும் போது பெயர்ச்சொல்லாகவே கருதப்பெற வேண்டும். (ஒரு வகைச் சொல்லின் பெயர்) பெரும்பாலும் இந்நுட்பத்தை நோக்காமல் விட்டு விடுவதால் ஏ பல இடங்களில் தன்னை உணர்த்தும் போதும் இடைச்சொல் ஆகவே கருதப்படுகிறது. ப.வெ.நா.)