உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xv

நூற்பா நிரலுள் காணப்பெறும் சில மாற்றங்கள்

இசைநிறை அசைநிலை என்னும் நூற்பா (906) அடுக்கைப் பற்றியுரைத்தலின் தெய்வச்சிலையார் இதனை இப்பொருள் பற்றிய 907-910 நூற்பாக்களுக்கு முன் வைத்தார். அதாவது எச்சவியலின் 15ஆவது நூற்பாவை 26ஆம் நூற்பாவாகக் கொண்டார்.

இறப்பின் நிகழ்வின் (911), எவ்வயின் வினையும் (912), அவைதாம், தத்தங் கிளவி (913) ஆகிய எச்சவியல் நூற்பாக்களைத் தெய்வச்சிலையார் வினையியல் இறுதியில் அமைத்துக் கொண்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

ம.கா.ப.ப் பதிப்பாகிய அகத்திணையியல் உரைவளத்தில் அதன் பதிப்பாசிரியர் மு. அருணாசலம்பிள்ளை ஏழு நூற்பாக்களை இடமாற்றஞ் செய்துள்ளார். அது வருமாறு:

நூற்பாஉரையாசிரியர்கள் அமைத்த நிரல்மு.அ. அமைத்துக் கொண்ட நிரல்
இருவகை (960)15
திணைமயக்குறுதலும் (961)22
உரிப்பொருளல்லன (962)33
புணர்தல் பிரிதல் (963) 44
கொண்டுதலைக் கழிதல் (964) 56
கலந்த பொழுதும் (965)67
முதலெனப் படுவது (966)71

பால. முதலெனப் படுவது என்னும் நூற்பா (965) உரையாசிரியர்கள் கொண்ட இடத்திலேயே இருத்தற்குரியது என்பதைத் தம் காண்டிகையுரையில் விளக்கியுள்ளார். (பக். 46)

இவருடைய முறைமாற்றம் பற்றி வ.சுப. மாணிக்கம். "கிடக்கை முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், கிடந்தாங்கு போற்றிக் கொண்டு, ஆனால் இப்படியிப்படி இருக்கலாம். இருந்தால் பொருளிது வாகும் என்று பொருள் விளக்கம் செய்யும் அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்பர். (தொல்காப்பியத் திறன் பக். 7)

சொல். வேற்றுமை மயங்கியலின் 10ஆம் நூற்பா ஆகிய இரண்டன் மருங்கின் (579) முதல் அன்ன பிறவும் (587) என்னும் 18ஆம் நூற்பாவரையுமான 9 சூத்திரங்களையும் தெய்வச்சிலையார் பிற உரையாசிரியன்மாரின் முறைவைப்பினின்றும் சிறிது வேறுபடுத்துக் கொண்டுள்ளார்.