இவ்வாய்வின் முதல், இறுதிப் பகுதிகளைப் பார்வையிட்டுத் தம் கருத்துக்களை உதவியவர் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா முனைவர். திருமதி. குளோரியா சுந்தரமதி ஆவர். அவர்கட்கு என் மனம் நிறைந்த நன்றி உரியதாகுக. தமிழ் கூறு நல்லுலகம் ஏற்றுக் கொள்ளும் என்னும் துணிபுடையேன். இங்ங்னம் கே.எம். வேங்கடராமையா பேரா. கே.எம். வேங்கடராமையா அவர்கள் 31-1-1994 அன்று அமரரானபின் அவரால் முடிக்கப் பெற்றிருந்த மூலபாடத்திற்கும். பாடபேதங்களுக்கும் அறிஞர் ப.வெ. நாகராசன் அவர்களால் மற்றொரு சுத்தப் பிரதி எழுதப்பட்டது. இதில் அவர் இடையிடையே சிற்சில இடங்களில் குறிப்புகளையும் குறித்துள்ளார். உரிய பிற்சேர்க்கைகளும், நூற்பா முதற் குறிப்பகராதியும் அவரால் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளன. சிவகாசியில் கணிப்பொறிவழி அச்சாகுங்கால் அவர் உடனிருந்து மெய்ப்புத்திருத்தி நூலைச் செம்மைப்படுத்தி உதவினார். 20–11–1995 நிறுவனத்தார்.
பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/25
Appearance