$ГғT L2[TLЧ 3. H நீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி யெழுஉத லென்மனார் புலவர். பா.வே. யெழுதல் - சுவடி 1053 பிழை, அளபெடை விடுபட்டுள்ளது. 7. கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை" நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. E. ஒளகார விறுவாய்ப் பன்னி ரெழுத்து முயிரென மொழிப. 8. னகார விறுவாய்ப் 5. பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. 9. 10. மெய்யொ டியையினு முயிரிய றிரியா. I0. PTH பT. பெ. மெய்யோ - பதிப்பு 1.5,52 11. மெய்யி னளபே யரையென மொழிப. 11. LT. வே. அளவே - சுவடிகள் 73, 115, 1052. பதிப்பு 47 இல் அளவு என்பது நச்சர். பாடம் என உள்ளது. ஆனால் பதிப்பு 1 இல் அளபு என்றே உள்ளதால் இக்குறிப்பு பொருந்தவில்லை. எனினும் பதிப்புகள் 14, 15, 25, 46 ஆகியவற்றில் அளவு என்றே உள்ளது. அளபு என்பதே பொருத்தமான பாடம். - 3-6, 11, 13, 33, 97, 102, 10.3 ஆகிய பத்து நூற்பாக்களில் அளபு என்னும் குறியீட்டைப் பயன்படுத்தியுள்ள ஆசிரியர் அளபாவது யாது என விளக்கும்போது, கண்ணிமை நொடியென வவ்வே யளபு என்றே கூறியிருக்கலாம். சொல்லதிகாரத்திலும் மூன்று இடங்களில் (தொல். 634, 766, 771) அளபு என்றே ஆளுகிறார். அங்கும் மாத்திரை என்னும் ஆட்சி இல்லை. LJTEA), 'இசையளவினை மாத்திரையெனக் குறியீடு செய்தது பின்ன ராளுதற்பொருட்டென்க' என்கிறார். பொருளதிகாரத்தில் மூன்று இடங்களில் தவிர. எழுத்து. சொல் அதிகாரங்களில் (இந்த ஒர் இடத்தைத் தவிர) மாத்திரை என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படாததால் இக் கருத்திற்கு வலிமை இல்லை. இதனால் தொல்காப்டரியர் இந் நூற்பாவில் மாத்திரை என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. -கே.எம்.வி.
பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/38
Appearance