இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
B எழுத்ததிகாரம் 33. அளவிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் உளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர். 33 பா.வே. 1. அளவிறந் - சுவடிகள் 73, 115, 1053 2. திசைத்தலும் - சுவடி 10:52, பதிப்பு 77 3. மொழிவ" - பதிப்பு 77, இதற்குச் சுவடிச் சான்றில்லை. நூன்மரபு முற்றும். டி "மொழிவ - வகர வீற்றுப் பலவின்பால் வினைமுற்றுப் பெயர். மொழிட என்ற பழைய பாடம் மயக்கந்தருதலின் நச்சினார்க்கினியர் அதனைப் பலர்பால் வினைமுற்றாகக் கொண்டு பொருள் செய்ததோடு, இந்நூற்பாவினை இரு தொடர்களாகப் பிரித்துப் பொருள்செய்த நிலையும் ஏற்பட்டு விட்டது. எனவே படுவ. மொழிப என்ற பாடங்கள் மயக்கந் தீரப் பொருள்செய்ய உதவுவனவாம்." தி.வே. கோ. பதிப்பு 77 பக்.XV