பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

183



"நாயுடுவிடம் எடுத்த காரியத்தை தொடுத்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதி, ஊக்கம், விட முயற்சி, அறிவது எப்படி? என்ற குறிக்கோள் அனைத்தும் அமைந்திருக்கின்றன".

இவருக்குப் பண்டைய சம்பிரதாயங்களில், பழக்க வழக்க நம்பிக்கைகளில், தற்காலத்தின் வாழ்க்கைக்கு எவை பொருத்தமோ, அவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் விருப்பமுள்ளவர்.

பெளதீகம், இரசாயனம், பொறியியல், மனையியல் ஆகிய வற்றுக்கான 50 விஞ்ஞானப் பிரிவுகளைப் பற்றிய கருத்தை திரைப்படம் மூலமாக எனக்கு ஜி.டி. நாயுடு தமிழில் கற்பித்தார்.

திரு. நாயுடு அவர்கள் நமது நாட்டு மக்களின் திறமைகளை நடைமுறையில் காட்டுவதில் வல்லவராகத் திகழ்கின்றார். அதனால் இவர் அதிசய மனிதராகவும் காட்சி தருகின்றார். எதிர்காலம் எப்படி அமையும் என்பதை அறிவதிலே அவர் திறமையுள்ளவராகவும் உள்ளார். மற்ற மக்களின் உயர்ந்த வாழ்க்கைக்கு நாயுடு நல்லதொரு எடுத்துக் காட்டாகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்தியாவின் -
முதல் நிதியமைச்சர்!

பாரத நாடு சுதந்திரம் பெற்ற பின்பு, இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பொருளாதார மேதை திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள், கோவை மாவட்டத்திலே பிறந்து வளர்ந்த சிறந்த வித்தகர். பண்டித நேரு போன்றவர்களால் பாராட்டப்பட்ட, வியப்புக்குரிய பொருளாதார அறிவுடையவர். அத்தகைய ஒரு மேதை ஜி.டி.நாயுடுவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே!

"திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் ஓர் அமைச்சரை வரவேற்று அவருக்கு விருந்துபசாரம் செய்து, அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டுமென்று விளக்குகிறார்”.

"ஒரு தொழில் வல்லுநரை அழைத்துப் பாராட்டி நம் நாட்டுத் தொழில் முறை பற்றிய வருணனைகளைச் செய்கிறார். ஜி.டி. நாயுடு அன்போடு தனது எண்ணத்தை எடுத்து விளக்கும் வகை, அவரது