பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

45


பாராட்டுவதுடன், நிறுவன சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றிப் போற்றும் மன உணர்வை மதித்து, அவர்கள் குறைகளைப் போக்கியதோடு, மன நிறைவோடு பணியாற்றவும் வழி வகைகளைச் செய்து ஊக்கப்படுத்தினார்.

ஒரு வாலிபன் திரு. ஜி.டி.நாயுடுவை நேராகச் சந்தித்து, மிகுந்த பணிவுடன், 'ஐயா, எனக்கு வேலை இல்லை; ஏதாவது ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது நாயுடுவுக்கு வந்த யோசனை என்ன தெரியுமா?

சிற்றுண்டி விடுதியில் ஒரு முறை நாயுடு சென்று ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டதும், அதற்கு அந்த முதலாளி மாதம் பன்னிரண்டு ரூபாய் சம்பளம் கொடுத்த சம்பவமும், அதைப் பெற்றுக் கொண்டு அந்த விடுதியிலேயே இரவும் - பகலுமாக தங்கியிருந்த தனது பழைய நிலையும் அவருக்குத் தோன்றியது. அந்தக் காட்சியை அவர் நினைத்துப் பார்த்தார்.

உடனே அந்த வாலிபனை, உனக்கு என்ன வேலை தெரியும் தம்பி’ என்று கேட்க, அதற்கு அவன், “தாங்கள் சொல்லும் எந்த வேலையையும் செய்யத் தயார் ஐயா” என்று மறுமொழி கூற, அவன் நிலையைக் கண்ட நாயுடு, ஒரு வேலையைக் கொடுத்தார். என்ன வேலை அது என்று கேட்கிறீர்களா?

இரக்கத்தோடு உதவும் :
மனமுள்ளவர்!

தினந்தோறும் அந்த வாலிபன் காலை ஏழு மணிக்கு பணிக்கு வரவேண்டும். ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிக் கொள்ள வேண்டும். அவன் நினைக்கும் தூரம்வரை பேருந்தில் செல்ல வேண்டும்.

எதிரே வரும் அதே நிறுவனத்தின் வேறொரு பேருந்தில் அவன் ஏற வேண்டும். எந்த திசையில் அது போகின்றதோ அந்தத் திசையில் பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவன் இரவு ஏழு மணி வரை ஒவ்வொரு பேருந்துவாக ஏறிஏறி இறங்கிச் சென்றபின்பு, மீண்டும் அன்று இரவே அவன் எட்டு மணிக்கு திரு. நாயுடுவைச் சந்தித்து அன்று அவன் சென்ற பேருந்துகள் ஊர் பெயர்களைக் கூற வேண்டும்.