பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இங்கிலாந்து நாட்டின் எல்லையை அவர் தொடும்போது, இரண்டாவது உலகப் பெரும் போர் துவங்கிவிட்டது. செர்மன் நாஜிப் படைகள் போலந்து நாட்டுக்குள் கொள்ளையர்களைப் போல புகுந்துவிட்டன. இங்கிலாந்து நாடு தனது தொழில் வளத்தை நிறுத்திக் கொண்டு, போர்க் கருவிகளைச் செய்யத் தீவிரமானது.

அந்த நேரத்தில் ஜி.டி.நாயுடு இலண்டன் மாநகர் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கினார். சில தொழிற்சாலைகளுக்குள் புகுந்து, அங்கு செய்யப்படும் போர்த் துறை தளவாடக் கருவிகளைக் கண்டு வியந்தார்!

அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சென்றார்! இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க நேச நாடுகள் அணியைச் சார்ந்தது அல்லவா? அதனால், அவருக்குச் சுலபமாக அனுமதி கிடைத்தது அமெரிக்கா சென்றிட!

நியூயார்க் நகரில்
உலகக் கண் காட்சி!

1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் உலகக் கண்காட்சி நியூயார்க் என்ற நகரில் நடைபெற்றதால், ஜி.டி. நாயுடு அந்த கண்காட்சிக்குச் சென்றார்!

தினந்தோறும் உலகக் கண் காட்சிக்கு நாயுடு செல்வார். அவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “நான் நாள்தோறும் தவறாமல் கண்காட்சிக்குப் போவேன். நான் தான் கண்காட்சியில் நுழையும் முதல் மனிதனும், முடிந்த பின்பு வெளிவரும் கடைசி மனிதனும் ஆனேன். நாள்தோறும் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டதும் காட்சி சாலைக்குள் போவேன். மாலை வரை எதையும் உண்ணமாட்டேன். ஒவ்வொரு இயந்திரமாகப் பார்த்துவிட்டு, வீடு திரும்புவேன்” என்று எழுதியுள்ளார். ஜி.டி. நாயுடு.

உலகக் கண் காட்சியை ஒவ்வொரு பிரிவாக 4 ஆயிரம் அடிகள் படம் எடுத்தேன். அந்தக் கண் காட்சியிலே ஒவ்வொரு இயந்திரமும் தொழில் அறிவு வளர்க்கும் துணையாக எனக்கு இருந்தது. நானும் ஒவ்வொரு இயந்திரத்தையும் பலமுறைப்