8 பார்வகிபாய் அகவலே. நம் அம்மையார் இரண்டு ஆண்குழந்தைகளையும் ஒரு பெண்குழந்தையினையும் பெற்றெடுத்தார். அக் ,முந்தைகளுள் இரண்டு பிறந்த அன்றே இறந்துவிட்டன. நாராயணன் என்னும் குழந்தைமட்டும் கம் அம்மையாரின் மகிழ்ச்சிக்குக் காரணமாயிருந்து வளர்ந்துவரலான்ை. இரு குடும்பத்தினரும் சில ஆண்டுகளே அவ்விதம் வாழ்ந்துவந்தனர். அதற்குள் பார்வதிபாய்கணவருக்கு உத்தியோகம் மாறிவிட்டது. அவர் ராய்' என்னுஞ் சிற்றுாருக்குச் சென்று தொழில் புரிய வேண்டியவரானுர். அம்மையாரும் அவர்கணவருைம் அந்தக் கிராமத்தில் ஒரு சில நாட்களே தங்கியிருந்தனர். அவ்வூரின் தட்பவெப்பகிலே அதவலேயினுக்குப் பிடிக்கவில்லை. அங்கே சென்ற சில நாட்களுக்குள் அவ் விளைஞர் மலேரியா என்னும் நச்சுக்காய்ச்சலுக்கு ஆளாயினர். பலவித மருத்துவம் செய்தும் அக் காய்ச்சல் நிற்கவில்லை. அதவலே நாளுக்குநாள் இளைத்து உரு மாறிவிட்டார். அங்கே தகுந்த உதவியும் இல்லை. ஆதலின், பார் வதிபாய் தம் கணவரை அழைத்துக்கொண்டு தேவ்ருக் என்னும் தமது ஊரை அடைகதா. பாலகிருஷ்ண ஜோஷி தம்மால் இயன்ற மருத்துவ முறைகளையெல்லாம் செய்துபார்த்தார். காய்ச்சல் கிற்கவேயில்லை. அதவலே சில காள் பாயும்படுக்கையுமாகக் கிடந்து உயிர் நீத்தார். ". பாலகிருஷ்ண ஜோஷியாருடைய மூன்று பெண்களுள் ஆனந்திபாய் தமக்குத் திருமணம் நிகழ்ந்த சில
பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/14
Appearance