வாழ்க்கை வரலாறு
21
வுமே கருதினர், கர்ம சிரத்தையாக அவற்றை அவர்கள் போற்றியதில்லை. வீட்டில் உள்ள பெண்கள் எந்தப் பண்டிகை வந்தாலும் சரி, பூஜையாயினும் சரியே, சிறப்பாகக் கொண்டாடத் தவறியதே இல்லே. ஜவஹர்லால் தாயுடனும் பிறருடனும் சேர்ந்து போய் கங்கையாடுவதிலும், கோவில்களைச் சுற்றுவதிலும், காசியைக் காண்பதிலும், புகழ் பெற்ற சன்யாசிகளைத் தரிசிப்பதிலும் குதுகலம் அடைந்தார். எனினும் இந்த அனுபவங்கள் எல்லாம் அவருக்கு பக்தி புகட்டவுமில்லை உள்ளத்தில் உயரிய தடங்கள் பதித்து விடவுமில்லை.
ஹோலி. தீபாவளி, ஜன்மாஷ்டமி, தசரா, ராம லீலா முதலிய பண்டிகைகளை அமர்க்களமாகக் கொண்டாடுவதில் ஜவஹரும் ஆனந்தம் கண்டார். ஆயினும் அவர் மிக அதிகமான உவகை கொண்டது அவரையே விழாநாயகனாகக் கொண்டு நிகழ்த்தப்படும் பிறந்த நாள் வைபங்களின் போதேயாம். பரபரப்பூட்டும் சுதினும் அது. அன்று அதிகாலேயிலேயே நேருவைப் பெரிய தராசு ஒன்றில் நிறுத்தி கோதுமை மூட்டைகள், இதர பொருள்கள் எல்லாம் கொண்டு எடைபோடுவார்களாம். பின்னர் அப்பொருள்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கி விடுவது வழக்கம். நேரு புத்தாடைகள் புனைந்து ‘ஜம்’ மென்றும் விளங்குவார். பலரும் அன்புப் பரிசுகள் கொண்டு தருவர். பிறகு பெரிய விருந்து நடைபெறும். சிறுவன் நேரு பெருமைப் பட்டுக் கொண்டதில் அதிசயம் ஒன்றும் இல்லை அல்லவா? ஆனால் அந்நாட்களில் அவருக்கு ஒரே ஒருவருத்தம் இருந்ததாம். இந்தப் பிறந்த நாள் ஆண்டுக்கு ஒரு முறை தானே
2