வாழ்க்கை வரலாறு
33
தண்ணீர் அவரை அடித்துச் சென்றது. அவரது தோழர் சமாளித்துக் கரை ஏறி, ஒரமாகவே ஓடிச் சென்று நேருவின் கால்களைப் பற்றி இழுத்து வெளியேற்றிப் பாதுகாப்பளித்தார். எத்தகைய பேராபத்திலிருந்து நேரு காப்பாற்றப்பட்டார் என்பது பின்னர் தான் புரிந்தது. இருநூறு கஜ தூரத்துக்கப்பால் அந்நீரோடை குதித்துப் பாய்ந்து மலைமுகடு ஒன்றின் விளிம்பிலிருந்து பெரும் பள்ளம் நோக்கித் திடுமென விழும் அழகு அருவியாக மாறிவிடுகிறது என்பதைக் கண்டார்கள். அவ்வட்டாரத்தின் அழகுச் செல்வம் அது. அது நேருவின் உயிரைப் பறிக்க இருந்ததே!
ஏழு ஆண்டுகளை இங்கிலாந்திலேயே கழித்து விட்ட நேரு 1912-ல் சட்டத் தேர்வு பெற்ற பிறகு இந்தியா திரும்பினர். இடைக்காலத்தில் அவர் இரண்டு தடவைகள் தாய்நாடு வந்து போயிருந்த போதிலும், இப்போது பம்பாயில் அடிஎடுத்து வைத்த போது தாம் முற்றிலும் மாறிவிட்டது போன்ற தன்னுணர்வு மிகுந்தவராகத் தான் விளங்கினர் அவர்.
1912-ம் வருஷ இறுதியில் அரசியல் துறையில் தேக்கம்தான் நிலவியது. திலகர் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார். தீவிரவாதிகள் ஓய்ந்து ஒடுங்கிப் பம்மியிருந்தனர். உள் நாட்டு விவகாரங்கள் ‘சுரத்' இல்லாமலிருந்தன. மிண்டே மார்லி சீர்திருத்தம் என்ற கண்துடைப்பு காரணமாக மிதிவாதிகள் திருப்தியுடன் காலந்தள்ளினார்கள். தென் ஆப்பிரிக்கப் பிரசனைதான் கொஞ்சம் பரபரப்பு அளித்து வந்தது. பங்கிப்பூரில் கூடிய காங்கிரஸ் சலவை மடிப்புக் குலேயாத சட்டை வீரர்களும், ஆங்கில-