உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

13


நற்றினை தெளிவுரை


தான, கார்த்திகை மீன் பொருந்தியதும், அறஞ்செய்தற் கமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப், பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக!

சொற்பொருள்: சிவந்த - புலியின் குருதிக்கறை படிந்த தனாலே சிவப்புற்ற புலவு நாறு-புலால் நாற்றங்கொண்ட இருங்கோடு-பெரிய கொம்பு. ஒலிதல் - தழைத்தல் - உண் டாதல். ஆர்ப்ப-ஒலிக்க. வலிசிறந்து- வன்கண்மை மிகுந்து. வன்சுவல்-வலிய மேட்டுநிலப் பகுதி; வன்மையாவது நீர்ப் பசையால் நெகிழ்வு பெற்றிராத வறட்சித் தன்மை. பராரை - பருத்த அடிமரம். முருக்கி-ஒடித்துத்தள்ளி. தடக்கை - பெரியகை - துதிக்கை. பொன்புரை கவளம்-பொன் போலத் தோன்றும் வேங்கைப் பூவும் தழையுமாகக் கூடிய உணவுக் கவளம். தேன் செய்-தேனை ஈட்டும். பெருங்கிளை. பெரிதான வண்டின் கூட்டம். புறந்தருபு -அன்போடுங் கூடியதாய். விடரகம் - மலைக்கண்ணுள்ள பிளவிடங்கள்; வெடிப்பிடங்கள் என்பர். கவைஇ - தன்பாற் கொண்டு. காண்வர- காட்சிக்கு இனிதான அழகோடு. குறுமகள் - இள மகள். அறுமீன் கெழீஇ அறம்செய் திங்கள் - கார்த்திகை மீன் பௌர்ணமியன்று கூடிவருகின்றதும், அறம் செய்தற்கு உரியதுமாகிய கார்த்திகைத் திங்கள் பெளர்ணமி நாள். கோங்கம் - கோங்கமரம். அணிந்த அணிந்த காடு- அழகுறப் பெற் றுள்ளதனாலே அணிபுனைந்தாற் போலத் தோன்றும் காடு.

விளக்கம்: 'புலிபொரச் சிவந்த புலவு நாறு இருங் கோட்டு வேழம்' என்றது. புலியை அணிமையில் தானே தன் கோட்டால் குத்திக்கொன்று, அதன் குருதிக்கறை படிதலால் சிவந்தும், புலவு நாற்றங்கொண்டும் விளங்கிய பெரிய கோட்டையுடைய வேழம்' என்றதாம். அத்தகு ஆண் மையன் தான் என்பதும் உணர்த்தினான். அவ் வேழம் வலிசிறந்து வன்சுவற் பராரை வேங்கையை முரித்துத் தள்ளியது; அதுவும் புலிபோலத் தோன்றிய தோற்றத்தினால் என்க. அடுத்து, கன்றோடுங் கூடிய தன் பிடியைக் காணவும் அதன் சினம் தணிகின்றது. மென்தழையும் பூவுங் கூடிய வேங்கைக் கவளங்களை அன்போடே தன் கன்றுக்கும். பிடிக்கும் கொய்து ஊட்டுகின்றது. இவ்வாறே தலைவனும், தலைவியை மீட்கக் கருதித் தன்னை எதிர்த்து வருவாரை வென்றும், அலர் உரைப்பாரை ஒதுக்கியும்,தலைவியை யைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/19&oldid=1637152" இலிருந்து மீள்விக்கப்பட்டது