உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

25


இளையரும் முதியருமாகத் தத்தம் கிளையோடு கூடி யிருந்து, கொலைவல்ல சுறாமீன் தாக்கியதனாலே கிழிதற் பட்டுச் சுருங்கிப்போன, முடிகள் மிகுதியாயுள்ள வலையினைச் செப்பஞ் செய்வர். அதனைத் தம்பாற் கொண்டு, பெரிதான கடலிடத்தே பொருந்தியுள்ள பெரிய மீன்களைக் கொள்ளக் கருதியவராக, கொல்லுந் தொழிலிலே விருப்பமுடைய சிறுவர்கள் செல்வார்கள். நம் தலைவியும் அச் சிறுவர்க ளாலே கொள்ளப்பட்டவள் ஆவாள்.

கண்டல் - ஒருவகை

சொற்பொருள்: நீர்த்தாவரம்; முள் உள்ளது; வெண்பூக்கள் பூப்பது. முண்டகம் - நீர் முள்ளி. குவவு மணல் - குவிந்த மணல். அல்கல் - இரவுப் போதில். சிறாஅர், இளையர், முதியர் என மூவகைப் பருவமும் குறிக்கப்பட்டமை காண்க. கீட்படக் - கிழிதற்பட்ட தனாலே. முடிமுதிர்வலை-முடிகள் மிகுந்த வலை. முன்னிய கருதிச் சென்ற.

-

விளக்கம்: 'பாக்கம் கல்லென வரல் ஆனாது' என்றது, அவள் காதலனும் வரைவொடு வருவான் என்றதாம், 'நெடுந்தேர் பண்ணி' என்றது, அவன் நொதுமலர் குறிக் கும் இளைஞனிலும் தகுதியான் மிக்கவன் என்றற்கும், அவனும் தலைவிபாற் பெருங்காதலினன் என்றற்கும் ஆம். 'வந்தனர் பெயர்வர் கொல்' என்றது, அவன் தலைவியோ டன்றி மீளான் என்றதாம். 'கொலைவெஞ் சிறாஅர் கோட் பட்டனள்' என்றது, தலைவி தானும் வேற்று வரைவுக்குத் தமர் இசையின், கடலில் வீழ்ந்து உயிர் துறந்து, சிறுவரால் கொள்ளப்படுபவள் ஆவாள் என்பதாம்.

உள்ளுறை பொருள் : கீட்படச் சுருங்கிய முடிமுதிர் வலை யைக் கைக்கொண்டு, கொலைவெஞ் சிறாஅர் பெருங்கடலி டத்துப் பெருமீனைக் கருதிச் சென்றாற்போல, நொதுமலரும் தம்மாற் பெறவியலாத தலைவியின் வரைவை விரும்பித் தம் அறியாமையாலே வந்தனர் என்பதாம்.

மேற்கோள்: 'இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது' என்று கூறி, இச்செய்யுளை 'நாற்றமும் தோற்றமும்' (தொல்.பொருள். 144) என்னும் நூற்பா உரையிடத்தே, 'பிறன் வரைவாயினும்' என்ப தற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

+

நற்.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/31&oldid=1641366" இலிருந்து மீள்விக்கப்பட்டது