உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

நற்றிணை தெளிவுரை


தோழி

தலைகேறுக்கு

இவ்வாறு துறையமைதி


கொண்டால், நொதுமலர்

வரைவுமலிந்தமை போலப் படைத்து மொழிவாளாய்த் தலைவிக்குக் கூறுவாள் போலச், செவ்விநோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கும் தலைவனும் கேட்டு உணரும் பொருட்டுத் தோழி கூறியதாகக் கொள்க.

208. பிரிந்தாரைத் தரும் மழைக்குரல்!

பாடியவர்: நொச்சி நியமங் கிழார். திணை : பாலை துறை : செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத், தோழி சொல்லியது.

((து - வி.) 'தலைமகன் பொருள் தேடி வருதலைக் கருத்தினான். அதனால் தன்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லவும் முடிவு கொண்டான்' எனக் குறிப்பாலே அறிந் தாள் தலைமகள். அதனால், அவள் பெரிதும் வருந்தி நலிய, அவளுக்குத் தோழி தேறுதல் உரைப்பதாக அமைந்தது இச் செய்யுள்]

விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி

அறல்போல் தௌமணி இடைமுலை நனைப்ப விளிவில கலுழும் கண்ணொடு பெரிதழிந்து எவன்நினைபு வாடுதி, சுடர்நுதற் குறுமகள்? செல்வர் அல்லர்நங் காதலர்; செலினும் நோன்மார் அல்லர் நோயே; மற்றவர் கொன்னு நம்பும் குரையர் தாமே சிறந்த அன்பினர்; சாயலும் உரியர் பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் முடியா தாயினும் வருவர்; அதன் தலை இன்துணைப் பிரிந்தோர் நாடித்

தருவது போலுமிப் பெருமழைக் குரலே!

5

10

தெளிவுரை: ஒளி சுடருகின்ற நெற்றியை உடையா ளான இளமகளே! வலி குறைந்தவாய் விளங்கும் இழைகள் நெகிழ்வுற்று நீங்கும்படியாக விம்முகின்றனை! முத்துப் போலும் கண்ணீர்த் துளிகள் மார்பகங்களின் இடையே விழுந்து நனைந்தபடியும் உள்ளனை! விடாதே அழுகின்ற கண்களோடும் பெரிதும் நலனழிந்து எதனை நினைந்தோ நீயும் வாடுகின்றனை! நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/32&oldid=1641367" இலிருந்து மீள்விக்கப்பட்டது