பக்கம்:நற்றிணை-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 27 பவரே அல்லர்! அவ்வாறே சென்ருரானலும், தமக்கு உண்டாகும் காமநோயைப் பொறுத்திருப்பாரும் அல்லர்! அவர் நின்னிடத்தே பெரிதான விருப்பத்தையும் உடை யவர். நின்பாற் சிறந்த அன்பினையும் கொண்டவர். மிக்க மென்மைத் தன்மையினையும் உடையவர். அவரைப் பிரிந்து வாழும் நம்மினுங் காட்டில் இரக்கமுற்றவராய், தேடிச் சென்ற அரும் பொருள் முடியாத நிலையே யாலுைம், காலத்தை நீட்டியாது, உடனே நம்பால் வந்துவிடுவர். அதன் மேலும், இப் பெரிதான மேகத்து முழக்கமானது, இனிய துணையாயினரைப் பிரிந்திருப்போரையும் நாடித் தருவதே போலுமாய் இராநின்றது காண்! ஆதலினலே நீயும் இனி வருந்தாதிருப்பாயாக! சொற்பொருள்: விறல் சாய் விளங்கு இழை பிறர் அணிபவான ஒளிவிளங்கும் இழைகளினுங்காட்டில், தன் ஒளியுடைமையும் செய்வினைச் சிறப்பும் மிகுத்துக் காட்டி, அவற்றை வெற்றிகொள்ளும் வல்லமை சிறந்த இழைகள் என்றனர். அவை நெகிழ்தல், அவன் பிரிவை நினைந்தேங்கி உடல் மெலிவுற்றதனல். அறல் - கருமணல். தெள் மணி - தெள்ளிய மணிபோலும் கண்ணிர்த்துளிகள். இடைமுலை. முலைகளின் இடைப்பட்ட பகுதி. விளிவில் - விடுதலில்லாத ப்டி, கலுழல் - கலங்கி அழுதல். அழிந்து - நலன் கெட்டு. நினைபு - நினைத்து. நோன்மார் - பொறுப்பவர். நம்பு . விருப்பம். சாயல் - மென்மை. குரல் - இடிக்குரல். விளக்கம் : மழைக் குரலைக் குறித்துக் கூறியது, அங்ங்னமே அவர்தாம் செல்லற்கு நினைத்தாலும், அத்ற் குரிய காலமும் கார்காலமாகிய இதுவன்று; இதுதான் பிரிந்தோரை நாடித் தருவதன்றி, உடனுறைவோரைப் பிரிப்பதன்று என்கின்றனள். செல்வர் அல்லர்’ என்றவள், படிப்படியாகச் சென்ருலும் என, இப்படியே ஒவ்வொன் ருகச் சொல்வதை எண்ணி மகிழ்க. தோழி கூற்ருக அமையும் சொல்லாட்சிச் சிறப்பையும் உய்த்து உணர்ந்து இன்புறுக. இதல்ை, தலைவன் பொருள் தேடி வருதலின் பொருட் டாகப் பிரிந்து போவதற்குத் துணிந்தான் என்பதனை, அவனது குறிப்புக்களாலே அறிந்து, தலைவி அவன் பிரிந் தாற்போலவே உடல் மெலிந்து கலங்குவள் என்பதும், அத்னைக் காணும் தலைவன், தன் செலவைத் தள்ளிப்ப்ோடு வான் என்பதும் உணரப்படும். உணரவே, இல்லற வாழ் விலே தலைவன் தலைவியரிடையே விளங்கிய நெருக்கமான் மணவீடுபாட்டுச் செறிவும் விளங்கும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/33&oldid=774421" இலிருந்து மீள்விக்கப்பட்டது