உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

நற்றிணை தெளிவுரை


இப்பொழுதிலே, கடற்கரையைச் சார்ந்தபடியே சென்று பலரும் காத்திருந்த கல்லென்னும் ஒலியை யுடைய தான் இப் பாக்கத்திலேயே, இன்று நீயும் இவ்விடத்தேயே இருந்தவனாகி எம்மோடும் தங்கியிருந்தால், அதனால் நினக் கேதும் குறை உண்டாகுமோ? சிவந்த கோல்களோடும் பிணித்த வளைவாக இடப்பெற்ற முடிகளையுடைய அழகிய வலையானது கிழியும்படியாக, அதனை அறுத்துத் தப்பிச் சென்ற, கொல்லவல்ல சுறாமீனைக் கருதியபடி, மிகுந்த வலிமையுடனே சென்றுள்ளவரான எமரும், அதனைப் பிடித் துக் கொணராதே கரைநோக்கி வருவார் அல்லர்காண்!

சொற்பொருள்: இவர்ந்து - எழுந்து தோன்றி. குரூஉக் கதிர் - நிறம் அமைந்த கதிர்; செந்நிறக் கதிரும் ஆம். 'பகல் கெழு செல்வன்' என்பதற்குப் பதிலாகப் 'பகல் செய் செல்வன்' எனப் பாடபேதம் கொள்வர் சிலர். புலம்பு தனிமைத் துயரம். புன்கண் - புன்கண்மை ; வருத்தும் தன்மை. நகர் - மாளிகை. ஊன்நெய் - ஊனாகிய நெய். நீல் நிறப்பரப்பு - நீலநிறத்தையுடைய கடற்பரப்பு. 'ஒண்சுடர் என்பது, கரையோரத்தே, கடலில் மிதக்குமாறு, பாக் கத்தை அடையாளம் காணற்பொருட்டாக ஏற்றிவிடப் பெற்றுள்ள திமில் விளக்குகள் அல்லது மிதவை விளக்குகள் எனினும் ஆம். அன்றிப் பாக்கத்தே ஏற்றியுள்ள விளக்கு நிழல்களை அலைகள் அசைக்கும் என்பதும் ஆம். 'தெய்ய' அசை. பரிய - கிழிய. முன்பு - மிகுந்த வலிமை.

விளக்கம்: மாலையும் வந்து அடுத்து இருளும் வரப் போகின்றது; வலையறுத்துப் போன சுறாமீனைப் பற்றிக் கொணரக் கருதி எம்மவரும் கடலிடைச் சென்றுள்ளனர். அவர் வெற்றி வருகையை நோக்கிப் பாக்கத்தவரும் கரை சேர்பு கல்லென்னும் ஆரவாரத்தோடு கூடியுள்ளனர். எனவே, நீதான் எவ்விதப் பயமுமின்றி எம்மோடு இன்றிரவு தங்கிப் போவாயாக. இவள் மாலையை நோக்கி வருந்தும் பிரிவுத்துயரைத் தணிப்பாயாக என்கிறாள் தோழி. இதனால், தலைவி இரவிற்படும் துயரை நினைந்து, தலைவன் அவளை வரைந்து கோடற்கே முயல்பவன் ஆவான் என்பதாம். ஒண்சுடர் தயங்கு திரை உதைப்ப' என்பதுபோல், நம் உண்மைக் காதலுறவையும் குறிப்பான் உணர்ந்து அலவற் பெண்டிர் பழிதூற்றலும் நிகழும் என்றதுமாம்.

இனி, இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதற்கு, 'மணஞ் செய்து கொண்டால் அன்றித் தலைவியின் இல்லத்தே வைகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/48&oldid=1641382" இலிருந்து மீள்விக்கப்பட்டது