உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

ழகார் செழுந்தமிழின் அளப்பரிய செவ்வியை அறிந்து களிப்படைவதற்கு விரும்பினோமாயின், அவ்விருப்பம் நிறைவேறு வதற்கு- மெய்யாகவே நிறைவேறுவதற்கு— உறுதுணையாவன சங்கச் செழுந்தமிழ் நூற்களே எனலாம். அவை இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் நின்று நிலைத்து என்றும் புத்திளமைப் பொலிவோடு கற்றாரைக் கவரும் வனப்பின சிறப்பின, வளம் மலிந்தன! அவற்றினை. ஓரளவுக்கேனும் தமிழறிந்தார் யாவரும் கற்றறிந்து, தமிழின்பமும் தமிழறிவும் பெற்றுத், தமிழ்ப்பெருமையையும் தமிழர்களின் சீர்மையையும் போற்றுவதற்கு முந்துமாறு, தமிழுணர்வும் தமிழ்வீறும் பெறச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். அவ் விருப்பத்தின் விளைவாக மலர்ந்துள்ள தமிழ்மண மலர்களுள் ஒன்றுதான் இந் நற்றிணைத் தெளிவுரைப்பதிப்பும் ஆகும்.

என்

நற்றிணையின் 1-200 செய்யுட்கள் கொண்ட தெளிவுரைப் பதிப்பு 1967 இலேயே வெளிவந்திருந்தும், அதனைத் தொடர்ந்து வெளிவரவேண்டிய இந்தத் தொகுதியானது இப் போதுதான் வெளிவருகின்றது. இடையில், நற்றிணையின் 1-200 செய்யுட்கள் கொண்ட முதற்பகுதியானது இரண்டாம் பதிப்பாகவும் வந்து, இப்போது மூன்றாம் பதிப்பையும் எதிர் நோக்கியபடி உள்ளது. இந்தத் தொகுதி வெளிவரக் காலங் கடந்தமைக்கு என்னுடைய ஏலாமையே காரணம் என்று கூறித், தமிழ் அன்பர்கள் என்னைப் பொறுத்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்களை அன்போடு வேண்டு கின்றேன்.

இது தெளிவுரைப் பதிப்பு என்றாலும், இலக்கியத்தை நுட்பமாகப் பயில விரும்பும் மாணவ அன்பர்களுக்கும் உதவி யாகத் தெளிவுரையோடு மற்றும் பல தேவையான குறிப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/5&oldid=1636788" இலிருந்து மீள்விக்கப்பட்டது