உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சமரசப் பாட்டு

'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' என்று மெய்ஞ்ஞானச் செல்வராகிய தாயுமான ஸ்வாமி கள் ஒரு பாட்டிலே சொல்லுகிரு.ர். அதிகமாகப் படிக்கப் படிக்க மனிதனுக்கு வாதத்திலும் தர்க்கத்திலும் புத்தி போகிறது. தான் மெளனமாக இருப்பதை விட்டு விட்டு, எதிராளியை எப்படியாவது வாயை அடக்கி அவனது மெளனத்தில் தான் சந்தோஷப்பட வேண்டும் என்று முயல்கிருன். பிரதிவாதியைப் பயமுறுத்தி அடக்கிவிட்டோம் என்பதைக் கெளரவமாக எண்ணித் தருக்குகிருன். கல்வித்துறைகள் எல்லாவற்றிலும் இந்தச் சண்டை இருக்கிறது. ஆனல் இந்த நாட்டில் சாத்திரச் சண்டைக்கு அப்புறந்தான் மற்றச் சண்டைகள் எல்லாம். .

பிள்ளையார் பூசை செய்வது முதல், வேதோப நிஷத்தின் உண்மையைத் தெளிவது வரையில் ஆயிரம் சம்பிரதாயங்கள், ஆயிரம் மதங்கள், பல்லாயிரம் பேதங்கள்! இவற்றையெல்லாம் பார்க்கும்போது நிரீ சுவரவாதியாக எந்த மதத்தையும் சாராமல், கண்கண்ட உலகத்தில் நல்லவன் என்ற பெயரெடுத்து இறந்து போவதே போதும் என்ற நினைவுகூடச் சிலசமயம் வந்துவிடுகிறது. இவ்வளவு வேற்றுமைகள் எதற்கு?

இந்தச் சிக்கல்களுக்கு இடையே நர்க் அகப்பட்டுக் கொண் டால் தெய்வ ஒளியை எப்படிக் காணப் போகிருேம்! - --

இப்படி எண்ணிச் சலிப்படைந்துவிட்டால் உய்யும் வழிதான் எது? பாரத சமுதாயத்தின் புழம் பெருமை.