உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாடோடி இலக்கியம்

யெல்லாம் பொய்யா? சமயத்தின் பெயரால், வேத வேதாந்தத்தின் பெயரால், நம்முடைய நாட்டில் எல்லோருடைய வாழ்க்கையிலும் LI GUQf శ} & LIT తf

சாதனங்கள், தெய்வத்தை அணுக வேண்டுமென்று உண்மையான ஆர்வத்தோடு செய்யும் முயற்சிகள் கலந் திருக்கின்றனவே, அவைகளெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போனவைகளா? கணிக்க முடியாத பல கோடி நூழுயிரம் வருஷங்களென்று புராணம் சொல் கிறது. அதை நம்பாவிட்டாலும் பல்லாயிரம் வருஷங் களாகப் போற்றி வளர்த்து வந்த தெய்வ தம்பிக்கையின் அஸ்திவாரத்தையே வருங்கால சந்த் தியார் தகர்த்து விடத்த்ான் வேண்டுமா?

ஊஹ-ம்: தலையைத்தான் வலிக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. யோசிக்க யோசிக்க வேற்றுமை களின் சொரூபமும் எண்ணிக்கையும் பெரியனவாக ராக்ஷ சர்கள் மாதிரி முன்னே நின்று பயமுறுத்துகின்றன. கொடிப்பிணக்கு நிறைந்த காட்டுக்குள்ளே புகுந்து வழி கான மல் புத்தி தத்தளிக்கிறது. ஈசுவரா! இதுதான் இந்து சமுதாயமா? பாரத நாட்டின் மெய்ஞ்ஞானமா!

நம்பிக்கையை இழக்க வேண்டாம். அப்படி இழக்கவேண்டிய நிலை இன்னும் வரவில்லை; வரவே வராது. அட பைத்தியக்கார மனமே, எவ்வளவோ காலம்ாக ஊன்றிப் படர்ந்த பெரிய மரத்தின் சல்வி வேர்களைக் கண்டு அல்லவா நீ பயந்து போய்விட்டாய்! லக்ஷக்கணக்காக இருக்கும் அந்தச் சல்லிவேர்களிளுலா மரம் ஜீவித்திருக்கிறது? -

மூடமே! அதோ பார், ஆணிவேர் இரும்பு மாதிரி பூமிதேவியின் இருதயத்திலே ஆழப் பதிந்து, மேலே படர்ந்திருக்கும் மரம் முழுவதற்கும் ஆதாரமாக இருக் கிறதைக் கவனி. நீ ஏன் இந்தச் சல்லிவேரைக் கண்டு பிரமிக்கிருய்? அவைகளை அசட்டை செய். நேரேபோ.