49
மொழி, பெர்ஷியன் மொழி, புஷ்டு மொழி ஆகியவற்றையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இத்தனை பிற மொழிகளையும் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுக்கிறார்கள். இம் மொழிகளை முழு நேரப் பாடமாகக் கொண்டவர்கள், ஐந்தாண்டு படிக்க வேண்டும். வேளைப்படிப்பாகக் கொண்டவர்கள் ஆறாண்டுப் படிக்க வேண்டும். இவ்வளவு நீண்ட படிப்பிற்கு ஆட்கள் உண்டா ? பலர் உள்ளனர். வேளைப் படிப்பிற்குச் சேர்ந்துள்ளவர் எழுபது பேர். முழு நேரப்படிப்பிற்குச் சேர்ந்தவர் நூற்று எண்பது பேர். இந்த இரு நூற்று ஐம்பது பேர்களில் நூறு பேர் இந்திய மொழி பயில்வோர். அதுவும் நாடு! இதுவும் நாடு !
பிறமொழிப் படிப்பிற்கு ஏன் இவ்வளவு நீண்ட காலம்?' என்று கேட்டோம்.
விளையாட்டிற்காகவா இவ்விளேஞரகள் எல்லோரும் புதுமொழியைப் பிறநாட்டு மொழி யைக் கற்கிறார்கள் வாழ்க்கைக்குப் பயன்பட அல்லவா கற்கிறார்கள்?
திருத்தமாகக் கற்காவிட்டால், பிறமொழி பயன்படுமா? புரிந்து கொள்ளமட்டுமா பிறமொழி கற்பது? சொல்லவும், அது பயன்பட வேண்டாவா? சரியான உச்சரிப்போடும், முறையான இலக்கணத் தோடும் கற்றல்மட்டுமே கற்பதால் பயன் உண்டு. இல்லையேல், வெட்டி வேலை என்ற அறிவுரையை, அமைதியோடு கேட்டோம்.
மொழிவழியை அதோடு விட்டு விடுவோம். மக்கள் பண்பைப்பற்றிச் சிறிது கூறுகிறேன். உஸ்