உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாற்பெரும் புலவர்கள் மலையையும் நாட்டையும் புகழ்ந்து கொண்டே சென்றனர். - - சென்றவர், ஒர் ஊரில் அன்றிரவு தங்கினர். அவ்விரவு நிலாத் தோன்றியது. அந்நிலவைக் காணப் பாரிமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக் காலத்தில் தமது அரனுள்ளே தந்தையோடு இனிதே வாழ்ந்ததையும் அடுத்த நிலாக் காலத்துத் தாம் தந்தையை இழந்து தங்கள் பறம்பையும் இழந்து, தமியராய்ப் பிறர் இருப்பில் தங்க நின்றதையும் எண்ணி வருந்தினர். - பின்னர், கபிலர் அம்மகளிரை, அழைத்துக் கொண்டு பல நாட்கள் வழி நடந்து இளவிச் சிக்கோ என்னும் அரசனிடம் சென்றனர். அவன், நன்னன் என்னும் வேளிர்குலத் தலைவனது வழித் தோன்றல். அவன் கபிலரை வரவேற்றான். கபிலர், 'பாரி மகளிரை அவனுக்குக் காட்டி முகிலாலும் உச்சி அறியப்படாத உயர்ந்த மலைக்குத் தலைவ! நினது குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாமரங்களின் பழத்தைக் கவர்ந்து கொண்ட கடுவன், சிவந்த முகத்தை உடைய தனது மந்தியுடனே சேர்ந்து வாழும். அப் பலா பழங்களை மிக்குடையாய் நீ நினத்தைத் தின்று களித்த நெருப்புப் போலும் தலையை யுடைய நெடிய வேலினையும், களத்தைத் தன. தாக்கிக் கொண்டு வெகுளும் தறுகண் யானையை யும், விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தையும் உடைய விச்சிக்