பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

15



அடித்தது மண முழவு; இன்று அடிப்பது பிண இழவு: எதிர்பார்க்கவில்லை; கழுத்தில் கயிறு ஏறவில்லை; அதற்குள் இந்த அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது; செத்தவன் செத்தவன் தான். அவன் மனைவி பொட்டு கால் துட்டு தான்; அதனை அவள் அழிக்கவில்லை. எது எப்பொழுது நடக்கும் என்று முன் கூட்டி உரைக்க இயலாது.

மரணம் என்பது ஒன்று உண்டு; இதனை மறந்தே போகின்றனர்; அறிவிப்பு மணி தேவையாகிறது. செத்தவரை நாளை சாகின்றவன் சுமந்து செல்கின்றான். நேற்று இருந்தவன்; காற்று வாங்கச் சென்றான் இன்று காற்றோடு கலந்துவிட்டான். ‘யார் காயம் யாருக்கு நிச்சயம்?’ என்று தத்துவம் பேசுகின்றான். இவனைப் பற்றியும் மற்றவர் இப்படித்தான் பேசப் போகிறார்கள் பறை அடிப்பவன் வந்து சேர்கிறான்; வந்ததும் செத்தவனை எடுத்துப் பாடையில் வைக்கும்போது, அடிக்கிறான் ஒருமுறை; தூக்கிச் செல்லும்போது அடிக்கிறான் மறுமுறை; இறக்கி வைக்கும்போது மற்றும் ஒரு முறை. இப்படி மூன்றுமுறை ஏலம்போட்டு இந்தச் சவக் கோலத்தை அறிவிக்கிறான்; என்றாலும், இந்த ஈன ஜென்மங்களுக்கு எங்கே ஏறப்போகிறது; வாழ்வில் நேசம் வைக்கிறான். பாசம் காட்டுகிறான்; கோடி ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை விளைவிக்கிறார்கள்.

செத்த பிறகு இந்தப் பித்த மனிதன் சத்தமே செய்வது இல்லை; அவனைப் பற்றிப் பிறர் என்ன பிதற்றுகிறார்கள்? “நார் தொடுத்துக் கட்டுக” என்று அறிவிக்கின்றனர்; “நீர் மொடுத்துக் கொட்டுக” என்று பேசுகின்றனர்; “நன்கு ஆய்ந்து அடக்குக” என்று கூறி அடக்கம் செய்கின்றனர்; அவன் தான் செத்து