பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

33


வருவாய் இல்லை என்றால் எப்படி வாழ்வாய்?’ என்று கேட்கிறேன்.” 'இந்தச் சிக்கலில் அகப்படாமல் விலக வழி யாது?” என்கிறான். “பேசாமல் சந்நியாசம் கொள்! இது தான் நாலடி சொல்கின்ற ஓரடி”.

“மலை குலைந்தாலும் தன் நிலைகுலையாத மாண்பு உடையவரே தவத்தை மேற்கொள்வர். நெஞ்சு உறுதி இல்லை என்றால் தவத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணமாட்டார். இல்வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணற்க, துறவும் கடினமானதே; நல்லொழுக்கம் காத்துத் துறவுபேண வேண்டும். மேனகையைக் கண்டு நீ நகைக்கத் துவங்கினால் உன் வாழ்வு பிறர் ஏளனத்துக்கு ஆளாக அமையும்.”

ஒருகன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை அவனுக்குக் காட்டு. “இறைவா! அவனை மன்னித்துவிடு” என்று பாவமன்னிப்புக் கேள். அவன் பண்பு கொள்ளுவான்; பணிவுபெறுவான்; திருவள்ளுவன் ஆவான்.

அருள் உள்ளம் கொண்டு அனைவரிடமும் பழகுதல் சிறந்த துறவறமாகும். கண் பார்க்கத் துடிக்கிறது; செவி கேட்கத் துடிக்கிறது; முக்கு நுகர்கிறது. மெய் பொய்யை நாடுகிறது. ஐந்து புலன்களும் உன் கட்டுக்கு அடங்காமல் காட்டு எருமையாகத் திரிகின்றன. இவற்றை நல்வழிப்படுத்திப் புன்மை அகற்றினால் நிச்சயம் நீ வீடு பெறுவாய்.

மனம் காத்தல் தூய்மைக்குவழி; அதுவே துறவுக்குத் திறவுகோல்.

3