உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலருடைய நல்ல சிறு கதைகளைப் படித்தபோது கூட. அது வாழ்வின் ஒரு உதிரும் மலராகவே இருந்தது. ஆனல் நாவல்களில் மாந்தோப்பு நிழலின் சுகம் கிடைத்

5ჭJ.

கல்லூரியில் படித்தபோது மேல்மாடி நூலகத்தில் பிற மொழி நாவல்களை ஏராளமாகப் படித்த பிறகு நான் வெட்கித் தலை குனிந்தேன். தகழியின் 'செம்மீன்', தாராசங்கர் பானர்ஜியின் 'கணதேவதா' ஆகிய நாவல் களைப் படித்த பிறகு தமிழில் நாவலாசிரியர்கள் இருக் கிருர்களா? என்ற கடுமையான சந்தேகம் ஏற்பட்டது. கல்கியின் சரித்திர நாவல்கள் ஏகாதசி விரதத்திற்குப் பயன் படலாம், சில சுகமான வார்த்தைகள்--ஆனல் அடிமைச் சமூக அமைப்பை இந்த தேசத்தில் உருவாக் கிய ராஜ ராஜன் போன்ற மன்னர் பரம்பரையின் புகழ் பாடும் அந்த நாவல்களைச் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் எழுதினுல் இவர்களைப் பற்றி என்ன சொல்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/15&oldid=786029" இலிருந்து மீள்விக்கப்பட்டது