பக்கம்:நாவல் பழம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டைய வீட்டு மாடியில் அனைவரும் உறங்கப் போவதற்கு முன் நிலாவெளிச்சத்தில் அரசமரச் சிமெண்டுத் திண்ணை யில் பெண்கள் அரசமரத்தைச் சுற்றுவதைப் போல நாங்கள் அந்த நண்பரைச் சுற்றுவோம். சப்த ஜாலங்கள்-பொழுது போக்கு---மெளன மற்ற வெறும் பேச்சுகள் அன்று! டால்ஸ்டாயின் அன்ன கரீனாவைப் படித்தபிறகு, ஒரு மிகப் பெரிய மாற்றம் என்னுள் நிகழ்ந்தது. நாவல் களை பக்தர்கள் இருமுடி சுமப்பதுபோல் சுமந்துகொண்டு தனி இடங்களைத் தேடிப் பிடித்து நானும் ஒரு வாசகன் ஆனேன். சிறுகதை படிப்பது ஞாயிற்றுக்கிழமைச் சோம்பேறி களின் வேலை. கவிதைகள் பிறர் நம்மை மேதாவியாகக் கருத... கூட்டத்தில் மேற்கோள் காட்டப் படிக்கப்படு கின்றன. (தமிழகத்தைப் பொறுத்தவரை இது அதிகம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/14&oldid=786028" இலிருந்து மீள்விக்கப்பட்டது