(3) மாணவர் இதறி இ * மாணவர் என்னும் சொல்லுக்குப் பலர் பலவிதம் பொருள் கொள்வர். எனினும், நம் நாட்டுப் பெரி யோர் பலரும் மாட்சிமைக்கு உரியவன் ' என்றே பொருள் கொள்கின்றனர். நன்னூலார் மாளுக்கரைக் குறித்துக் குறிப்பிடும் சூத்திரத்தில் 'அன்னம் ஆவே மண்ணுெடு கிளியே இல்லிக் குடம் ஆடெருமை கெய்யரி அன்னர் தலையிடை கடை மாணுக்கர்’ என மாணவர்களை மூவகையினராகப் பிரிப்பினும் அன்னம் போன்று நல்ல பொருளையே மனத்திற். கொள்பவனும், பசுப்போல் அந்த நல்ல பொருளை ப் பலமுறை ஆழ்ந்து சிந்தித்துத் தனக்கு உரிமையாக்கிக் கொள்பவனுமே சிறந்த மாணவன் ஆவன். சொன் னதைச் சொல்லும் கிளி போன்றவனும், இல்லிக்குடம் போன்று ஒரு காதில் வாங்கி மற்ருெரு காதில் விடு பவனும் நல்ல மாணவன் ஆகான் என்பதை விளக்கு தற்காகவே அவ்விரு பாலரையும் இடை மாளுக்கன் எனவும் கடை மானுக்கன் எனவும் பகுத்துக் கூறினர். அன்றியும் மாணவனுக்கு ஒழுக்கம் மிகவும் சிறந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகவே நன்னூலார்,
- களி, மடி மானி, காமி, கள்வன் பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன்