(4) இவை துகழ் இடத்தவச் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பம் பாய் இராச்சியத்தில் உள்ள ஒரு கோயிலின் முன்பு ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொள்ள முயன்ருர், ஆ! அந்தக் கொடிய செயல் நிகழ்ந்திருக்குமானுல், இன்று உலகத்தவரால் பாராட்டப் பெறும் நம் இந்திய நாடு சீரற்ற நிலையிலே, மதிப்பாரற்ற தன்மையிலே இருந்தி ருக்கும். ம் சுய ஆட்சியைக் குறித்துக் கனவும் கண் டிருக்க து. உண்மையின் உயர்வினையும், அகிம்சா தத்துவத்தின் அருமையினையும், சத்தியாக் கிரகம், ஒத்துழையாமை இயக்கம் என்னும் புதுப்புது முறைகளையும் நாம் உணர்ந்திருக்கவே இயலாது. மேலும் சொல்ல வேண்டுமானல் நாம் இப்பொழுது மேற் கொண்டொழுகும் ஆதாரக் கல்வித் திட்டமே தோன்றியிருக்க இயலாது. அந்த இளைஞர் இன்னர் என்பதை நான் உங்க ளுக்கு விளக்கிக் கூற வேண்டியதில்லை. அவர் தாம் உலகம் போற்றும் உத்தமர் , இறவாத புகழ் வாய்ந்த ஏந்தல் புத்தருக்குப் பின் ஏசுநாதருக்குப் பின் வேருெருவர் தோன்றவே இயலாது என்று எண்ணிய எண்ணத்துக்கு மாருகத் தோன்றி இந்த உலக அமை திக்கே வழிகாட்டியாக விளங்கி அழியாப் புகழ்பெற்று அண்மையில் நம்மை விட்டு மறைந்த மகான் காந் தி அடிகளே ஆவார்.
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/27
Appearance