22 கித்திலக் கட்டுரைகள் காந்தி அடிகளார் போர்பந்தர் என்னும் ஊரிலே 1868-ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதும் இராச கோட்டை என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளியில் கற். றுத் தேர்ந்து, இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவை அடைந்தவர் என்பதும், மிக இளமையிலேயே கஸ்தூரிபாய் என்னும் அம்மையை மணந்து புத்திரச் செல்வங்களோடு வாழ்ந்தவர் என் பதும், தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்தியருக்காக வெள்ளையருடன் போராடி வெற்றி கண்டவர் என்ப தும், இந்தியாவிலே காங்கிரஸ் இயக்கத்திலே சேர்ந்து ஒத்துழையாமைப் போராட்டம், மதுக்கடை மறியல், உப்புக் காய்ச்சும் போராட்டம் முதலியன புரிந்து வெற்றி பெற்று நமக்குச் சுய ஆட்சியை வாங்கித் தந்த வர் என்பதும் நாம் அறிந்தனவே ஆகும். அத்தகைய பேரறிஞர்தம் இளம் பருவத்திலேயே தற்கொலை புரிந்துகொள்ள முயன்ற காரணம் என்ன என்பதை நாம் இங்கே சிறிது ஆராயலாம். உரிமை யுடன் வாழும் எண்ணம் காந்தி அடிகளாருக்கு மிகவும் இளம் பருவத்திலேயே தோன்றி யிருந்தது. பெரி யோர் புரியும் ஒரு செயலைச் சிறியோர் செய்யலாகாதா? என் சிறிய தந்தை புகை பிடித்தால் நானும் ஏன் அவ்: விதம் புரிதல் கூடாது ? சிறியோர்கட்கு மட்டும் ஏன் இந்த அடிமை வாழ்வு ?" என்று எண்ணிஞர் நம்: இளைஞர் காந்தி அடிகளார். அதன் காரணமாக நேர்ந்த விபரீத எண்ணமே தற்கொலைச் செயலில் போய் முடிந்தது. காந்தி அடிகளாரைப் புகை பிடிக்கத் துண்டியதற்கும் மற்றும் பல தீமைகளை நம் அடிகளார்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/28
Appearance