உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 80 இனி, நான் இக்கால வாழ்வே சிறந்தது என்ற என் கொள்கையை விளக்கிச் சில கூற விரும்பு கின்றேன். இன்று மனிதன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களையும் அடக்கியாளும் வல்லமை படைத்திருக்கின்ருன். முற்கால மக்களை விட அறிவிலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்துள் ளான். முற்கால மக்கள் மூட நம்பிக்கை உடையவர் களாய் எல்லாம் விதியின் செயல் ; விதியை வெல்ல யாரால் ஆகும் என்று கூறிக்கொண்டு தம் முயற்சி யற்று வா ழ்ந்தனர். இக்கால மக்கள் தம் சக்தியின் ஆற்றல உணர்ந்துள்ளனர். அதனுல் அவர்கள் இவ், வுலகில் இன்பமாக வாழத் தக்க பற்பல வசதிகளையும் கண்டறிந்துள்ளனர் ; மனித உழைப்பைக் குறைத்து அவர்கள் இன்ப வாழ்வைப் பெருக்கியுள்ளனர். அக்காலத்தில் மனிதன் மாடுபோல் வயலில் உழைத்தான். இக்காலத்திலோ உழவும் விதைக்கவும் அறுவடை செய்யவும் விதம் விதமான கருவிகள் உள் ளன. அக்கால மனிதன் போக்கு வரவு வசதியில்லா மல் கிணற்றுத் தவளைய ய் நாட்டுவளம் அறியாமல் வாழ்ந்தான். இக்காலத்தில் ஒரே நாளில் ஒரு கண்டத் திலிருந்து மற்ருெரு கண்டத்திற்குப் பறந்து செல்ல வசதி ஏற்பட்டுள்ளது. அதல்ை இன்று, உலகமே ஒரு குடும்பம் என்ற உயரிய பண்பாடு வளர்ந்து வருகின் றது. மற்றும் வானெலி, தொலைபேசி, தொலைக்காட்சி, படக்காட்சி என விஞ்ஞானத்தால் இன்று விளைந்துள்ள புதுமைகள், வசதிகள் எண்ணிலடங்காதனவாகும். மருத்துவத்துறையில் இக்காலத்தில் ஏற்பட்டுள்ள புது மைகளைப் பழங்கால மக்கள் எண்ணியாவது பார்த்