42 கித்திலக் கட்டுரைகள் இன்றைய மக்களாட்சியில் கூட அத்தகைய கிராமங் களைக் காண இயலவில்லையே. என் நண்பர் இக்காலத்தில் உள்ள விஞ்ஞானப் புதுமைகளை வியந்து பாராட்டினர். இவையெல்லாம் முற்காலத்தில் உண்டா ? என்ருர். இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றேன். இவை எல்லாம் இருந்து என்ன பயன் ? இக்கால மக்களிடம் பண்டைக் கால மக்களிடம் இருந்த மனிதப் பண்பு இல்லையே இன்று ஏற்பட்டுள்ள இவ்விஞ்ஞானப் புதுமைகள் எல்லாம் மனிதர்களைச் சோம்பேறிகளாக்கவும், உலகத்தை அழிக்கவும், அஞ்சி நடுங்க வைக்கவும், தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்னும் நிலையை வளர்க்கவும் தாமே பயன்படுகின்றன. இவற்ருல் நாட்டில் இன்பமோ அமைதியோ ஏற்பட்டனவா ? மக்கள் படும் துன்பங். கள் குறைந்தனவா ? போரும் பிணக்கும் பேராசை யும் பொருமையும் நிறைந்துள்ள இக்காலத்திலும் நம் நாட்டில் வாழ்ந்த புத்தர், திருவள்ளுவர். அசோகர் போன்ற சான்ருேர்கள் வகுத்த அன்பு நெறியேடஇவ் வுலகைக் காப்பாற்றக் கூடியதாய் உள்ளது. நம் தலைவர் பண்டித நேரு கூறும் பஞ்சசீலம் என்பது அப்பழம் பெருங் கொள்கை தானே ஆதலால் இக் கால மக்களின் இன்ப வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ள பழங்கால வாழ்க்கை முறையே சிறந்தது என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்வர் என நம்பு கின்றேன். செந்தாமரை : அறிவு சான்ற தலைவர் அவர் களே ! அன்பர்களே ! வணக்கம். முற்கால வாழ்க்கை யைப் பாராட்டிப் பேசியவர்கள் இக்காலத்தில் கண்டு
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/48
Appearance