40 நினைவுச்
ஊருக்கும் ஆற்றுக்கும் ஒரு மைல் தூரம். இருபுறமும் விசிந்து கிடக்கும் பசிய வயல்களின் மத்தியில் கோணல் மாணலாக நாடா வைத்தது போல் ரோடு நெளிந்து நீண்டு கிடந்தது. போக ஒரு மைல்; வர ஒரு மைல். ரெண்டு: மைல் நடக்கனுமே!’ என்கிற மலேப்பு, நடக்கப் பயந்தசோம்பேறித் தனத்தை இயற்கையான சுபாவமாகக் கொண்டி ருந்த-ஊர்காரர்களே ஆற்றுக் குளிப்பின் சுகத்தை, அனுபவிக்க விடாமல் செய்து வந்தது. ஊரின் வடபக்க எல்லையாக அமைந்திருந்த பெரிய குளமும், அங்கிருந்து கிளம்பி மேற்கு எல்லையெனவும் வயல் வெளியின் விளிம்பு போலவும் நெளிந்து ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலும், ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் குளிப்புத் தேவைக்கு வசதி செய்து கொடுத்தாலும், குளிப்பதற்காக ஆற்றுக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்பது அவசியமற்ற விஷயம் ஆகிவிட்டது. வாய்க்காலிலும் குளத்திலும் தண்ணிர் இல்லாது போய் விடுகிற கோடை மாதங்களில்தான் இந்த ஊரசர் ஆற்றின் பக்கம் தலைகாட்டுவார்கள்.
இதர மாதங்களில்-வருஷம் பூராவும்-வேலை மெனக் கெட்ட இரண்டு மூன்று பேர் தினசரி ஆற்றில் போய், குளித்து வருவதை நித்திய நியதியாக அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊராரின் அனுதாபத்துக்கும், எதிரே வருகிற வயல் உழைப்பாளரின் வேடிக்கைக்கும் விண்ணுணப் பேச்சு’க்கும் இலக்காவதைத் தவிர்க்க முடியாப் பராபரங்களாக நடமாடினர்கள்.
மயிலேறும் பெருமாள் சிவபுரத்தில் இருந்த வர்ையில் தி ன ந் தோறும் காலேயிலும் மாலேயிலும் ஆற்றுக்குப் போவதை ஒரு கடமையாக நிறைவேற்றி வந்தார். காலே. நடை காலுக்கு பலம்; மாலே நடை மனசுக்கு நலம்’ என்றும் சொல்விக் கொள்வார். அநேகருக்கு, அவர் இப்படி நடந்து கொண்டிருப்பது, வேலேமற்ற மாமியார் கழுதையைப் போட்டுச் சிரைத்த கணக்குத் தான் என்றே தோன்றும். ஆறு பக்கத்திலே இருந்தால் பரவாயில்லை; ஊரிலேயிருந்து