பேர் அந்நேரத்தில் ஆற்றில் குளித்ததும் உண்டு. ஆமா, மணிஒசை கணகன என்று தெளிவாகக் கேட்கிறது என்று அவர்கள் உறுதியாய் சொன்னார்கள். இதனாலும் பூதபயம் மக்களிடையே அதிகரித்தது. எல்லாம் 1940களின் ஆரம்பவருடங்கள் வரைதான். தொடர்ந்து வருடாவருடம் ஆற்றில் பெருகி வந்த வெள்ளம் வெள்ளிமலைக் கசத்தில் மணலைச் சேர்த்துச் சேர்த்து பயங்கரப் பள்ளத்தைத் துர்த்துவிட்டது. நதியின் அந்த இடமும் சமதளமாகியது. ஆடுமேய்ப்பவர்கள் தாராளமாக அந்தப் பகுதியில் நடந்து போனார்கள். வெள்ளிமலை மீது ஏறிப்பார்க்க விரும்பியவர்களும் அந்த வழியாக நடக்கலானார்கள். கசத்தின் மறைவுடன், அதனுள் அமுங்கி பூதங்களால் பாதுகாக்கப் படுவதாகச் சொல்லப்பட்ட வெள்ளித்தேரின் கதையும் தானாகவே மடிந்துவிட்டது. கதைகள் கட்டிப் பரப்புவதிலும், அவற்றை நம்புவதிலும் மக்களுக்கு எப்பவுமே தனி விருப்பமும் ஆசையும் திறமையும் இருக்கத்தான் - செய்கின்றன. ராஜவல்லிபுரம் ஊருக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பதற்கும் ஊர்ப்பெரியவர்கள் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் அக்கரையில் (தென்கரையில்) கிழக்கே மணப் படைவீடு என்றொரு கிராமம் இருக்கிறது. வெள்ளிமலையிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஊர் அது நாட்டின் தென்பகுதியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநிலமன்னன் படைவீடு அமைத்து அங்கே தங்கியிருந்தானாம். அவன் தனது ஆசை நாயகிக்கு ஆற்றின் வடகரையிலுள்ள ஊரை அன்புடன் வழங்கியிருந்தான். அந்தக் காமவல்லி தங்கியிருந்த ஊர் ராஜவல்லிபுரம் என்று பெயர் பெற்றது. இது ஊரார் சொல்வது. ராஜவல்லிபுரத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை பல்வேறு ஊர்களின் பெயர்க் காரணங்களை ஆய்வுசெய்து, 'ஊரும் பேரும் என்று விளக்கங்கள் எழுதினார். ராஜவல்லிபுரம் என்ற பெயர் எப்படி வந்திருக்கும் என்று அவர் ஒரு கதை உருவாக்கினார். அது சரித்திரம் சார்ந்தகதையாகும். மதுரையில் அமர்ந்து அரசாண்ட பாண்டியமன்னர்களில் மாறன் பூரீவல்லபன் என்பவனும் ஒருவன். அவன் தென்பகுதியில் மக்களுக்கு நலம் பயக்கும், வளம் சேர்க்கும், பணிகள் பல செய்தவன். ராஜவல்லி நிலைபெற்ற நினைவுகள் : 21
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/21
Appearance