உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார் + காத்தார். மழைநீரை வீணாக்காமல் காத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தியவர்கள் என்று கொள்ள வேண்டும் இது பொருத்தமான விளக்கமாகவே தோன்றுகிறது. கார்காத்த வேளாளர்கள் தென்னாட்டில் குடியேறியது பற்றியும் வரலாற்றை ஒட்டிய கதைகள் வழங்கப்படுகின்றன. மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் காசியாத்திரை சென்றான். அங்கு வசித்து வந்த வெள்ளாளர்களைக் கண்டு அவர்களது செயல்திறனை வியந்தான். அவர்களை தமிழ்நாட்டுக்கு வரும்படி அழைத்தான். காசியில் வசித்த வேளாளர்களில் பலர் பாண்டிய மன்னனுடன் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறினார்கள். அவர்கள் அப்படிக் குடியேறியது மதுரைக்குக் கிழக்கே உள்ள வீரசோழம் என்கிற களவேள்வி நாடு அவர்களது உழைப்பாற்றலையும் வாழும் முறையையும் பற்றிக் கேள்விப்பட்ட சோழமன்னர்கள் அவர்களில் சிலரை சோழநாட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். குடும்பத்துக்கு ஒரு கிராமமாக வழங்கி அவர்கள் சீரும் சிறப்புமாய் வாழ வகை செய்தார்கள். அவர்கள் குடியேறிய பகுதி மங்கலநாடு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இப்படியும் ஒரு வரலாற்றுக் குறிப்பு. - பதினேழாம் நூற்றாண்டில், தென்பாண்டிநாட்டில், திருநெல்வேலிச் சீமையையும் சுற்றுவட்டாரங்களையும் பாளையக்காரர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள், மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த திருமலை நாயக்கருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள். பாளையக்காரர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் மூண்டன. மன்னருக்குக் கட்ட வேண்டிய கப்பத்தை அவர்கள் ஒழுங்காகக் கட்டவுமில்லை. மக்கள் அமைதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அதை அறிந்த திருமலைநாயக்க மன்னர், தமது தம்பி சொக்கநாத நாயக்கரை தெற்கே சென்று நிலைமைகளை சீர் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அச்சமயம் சொக்கநாதர் திருச்சியில் இருந்து அரசாண்டு வத்தார். அவர் தாமே தென் திசைக்குப் போகாமல் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான வடமலையப்ப பிள்ளை என்பவரை, ஒரு குதிரைப்படை யுடன் அங்கே சென்று அமைதியை நிலைநாட்டும்படி அனுப்பி வைத்தார். தெற்கு நோக்கிப் படையோடு பயணம் செய்த பிள்ளையன், வழிநெடுக உள்ள பாளையக்காரர்களை அடக்கி ஒடுக்கிப் பணிய 24 3: வல்லிக்கண்ணன்