பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தார். இறுதியில் வெற்றிகரமாகத் திருநெல்வேலி சேர்ந்தார். அவரது ஆற்றலை நன்கு அறிந்து கொண்ட நாயக்க மன்னர்கள், அவரை திருநெல்வேலியில் தங்களது அரசுப் பிரதிநிதியாக அமர்த்தினர். அங்கேயே தங்கி தங்கள் சார்பில் ஆட்சிபுரியும்படி செய்தனர். வடமலையப்ப பிள்ளை கார்காத்த வேளாளராவார். அவர் வடக்குப் பிரதேசங்களில் வசித்த தமது இனத்தவரின் பல குடும்பங்களை தெற்குப் பகுதிக்கு வருமாறு செய்தார். திருநெல்வேலியிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் அவர்கள் வசதியாகத் தங்கிப் பணி புரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிள்ளை மார்களில் சிறந்தவர் என்று குறிப்பிடும் விதத்தில், பிள்ளையன் என்ற சிறப்புப் பெயரையும் அவர் பெற்றார். அவர் காலத்தில் நெடுகிலும் வேளாண்மை செழிப்புற்று விளங்கியது. தெய்வ வழிபாடும் ஓங்கி வளர்ந்தது. ஆலயங்களில் பூசைகள் சீரும் சிறப்புமாக நடைபெறுவதற்காக பலஊர் திருக்கோயில்களிலும் கட்டளைகள் ஏற்பாடு செய்தார். அவர் வழிவந்த மக்கள் தெய்வபக்தியுடன் சீராக வாழ்ந்து, விவசாயத்தை கவனித்து வளம் பெற்றார்கள். இதுவும் வரலாற்றுக் குறிப்பேயாகும். - கார்காத்த வேளாளர்கள் சைவப்பிள்ளைமார் (வெள்ளாளர்கள்) இனத்திலிருந்து மாறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந் தார்கள். இவர்களுக்குக் கோத்திரம் உண்டு. வெள்ளாளர்களுக்குக் கோத்திரம் இல்லை. கார்காத்தாருடைய கோத்திரங்கள் உடை - உடை என்ற முடிவுகளைக் கொண்டவை. அங்கத்துடை, அங்கனுடை அஞ்சலுடை, அரியனுடைய, அன்னலுடை இறையுடை எருமனுடை, கடம்புடை, காருடை, குணமுடை, குமாரக் குடை, சாத்தனுடை என்றவாறு 19 கோத்திரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கார்காத்தாரில் பெண்களுக்கு சிறுவயதிலேயே, 5, 7 அல்லது 9 வயதில், விளக்கீடு கல்யாணம் என்றொரு சடங்கு நடத்துகிற வழக்கம் உண்டு முறையான திருமணம் போலவே இது சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் - விளக்கிடு கல்யாணத்தின் போது பெண் கழுத்தில் நவதாலி (இது பேச்சு வழக்கில் நவனாலி என்று சொல்லப்படுகிறது) கட்டப்படும். நிலைபெற்ற நினைவுகள் 38 25