வந்தவளைக் குறை கூறுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். மாமியார், நாத்தனார் முதலியவர்கள், வந்து சேர்ந்தவளை முழுமனசோடு ஏற்று சொந்தம் கொண்டாடுவதில்லை. ஊர்க்காரர்களும் வெளியூரிலிருந்து மணமாகி வந்தவளை அந்நிய மாகவே கருதுகிறார்கள். அவள் எந்த ஊரிலிருந்து வந்தாளோ அந்த ஊர்க்காரியாகவே மதிக்கிறார்கள் குறிப்பிடுகிறார்கள். மாறாந்தையிலிருந்து வந்தவள் மாறாந்தைக்காரி, கிடாரக்குளத்தில் இருந்து வந்தவள் கிடாரக்குளத்தா, கார்சேரியைச் சேர்ந்தவள் கார்சேரியாள்) - இப்படி அவள் எந்த ஊரிலிருந்து வந்தாளோ அந்த ஊர்க்காரியாகவே கடைசிவரை குறிப்பிடப்படுகிறாள். கலியாணமாகி இங்கு வந்து எத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தபோதிலும், அவள் ராஜவல்லிபுரத்தாளாக மதிக்கப்படுவதேயில்லை. இந்த ஊரிலிருந்து வேற்றுருக்கு வாழ்க்கைப்பட்டுப் போகிற பெண்தான் ராஜவல்லி புரத்தாள் என்ற பெயரைப் பெறுகிறாள், அவள் போய்ச் சேர்ந்த ஊரில் ராஜவல்லிபுரத்தில் வசித்த உறவுக்காரர்கள், முகத்துக்கு நேரே சிரித்துப் பேசிச் சொந்தம் கொண்டாடிய போதிலும், அம்மா இல்லாத போது அவளைப் பற்றிக் குறைவாகவே பேசினார்கள். அதே போல அம்மாவும் அவர்களிடம் நடந்து கொண்டாள். அப்பாவின் சொந்தக்காரர்களை எப்போதும் அம்மா கரித்துக்கொட்டியவாறே இருந்தாள். அதே சமயம் அவள் வீட்டுப் புரவோலங்களைப் பெரிது படுத்தினாள். அவர்கள் வீட்டின் பெருமைகள், கீர்த்திகள், அவளுடைய அண்ணாச்சிகள் தம்பிகளின் பிரதாபங்கள், ஊரின் மேன்மைகள் குறித்து எப்போதும் உயர்வாகவே பேசி மகிழ்வது அம்மாவின் வேலையும் பொழுது போக்குமாகவே இருந்தது. அவள் சாகிறவரை. அதற்கு எதிர்வினையாகத் தானோ என்னவோ அப்பா, அம்மாவின் சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள், அந்த ஊர் பற்றியெல்லாம் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. அவர்களை வெறுத்தார் என்றே சொல்லலாம் சமயம் கிடைக்கிறபோதெல்லாம் அவர்களைப் பழித்தும் பரிகசித்தும் பேசிமகிழ்ந்தார். எங்கள். அம்மாவை சேர்ந்தவர்களை மட்டும் தான் அப்படிப் பழித்து வந்தார் என்றில்லை. முந்திய மனைவிமாரின் சொந்தக்காரர்களையும் பரிகசிக்கவும் பழிக்கவும் அவர் என் அண்ணன் கல்யாணசுந்தரத்தின் மாமாக்களில் செந்திநாயகம் நிலைபெற்ற நினைவுகள் 38 33
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/33
Appearance