அத்தைமாரும் அக்காள்களும் பிரியத்தோடு வரவேற்றார்கள். Ꮿfröó© வேளையென்றால் தோசையும், தேங்காய்த் துண்டுகளும் கருப்பட்டியும் (கருப்புக்கட்டி - பனைவெல்லம்) கொடுத்து உபசரித்தார்கள். மாலை நேரமெனில் முறுக்கு, சீடை என்று அன்புடன் அளித்தார்கள். எந்நேரமும் கொடுத்து மகிழ்வதற்கு அவர்களிடம் ஏதாவது தின்பண்டங்கள் இருந்தன. கொடுக்கும் மனமும் அவர்களுக்கு இருந்தது. நாங்கள் ஊருக்கு வந்த சில நாள்களில் அப்பாவும் விடு முறையில் ஊர்வந்து சேர்ந்தார். சில வாரங்கள் தங்கியிருந்தார். உத்தியோக ரீதியில் இடம் மாறுதல் உத்திரவு கிடைத்தது. கோயில் பட்டிக்கு மாறுதல் அப்பா முதலில் போய், கோயில் பட்டியில் வசதியாக வீடு வாடகைக்கு அமர்த்தியதும் எங்களை அங்கு அழைத்துக் கொண்டார். 器 5 路 எனது நாலு, ஐந்தாவது வயதுக்காலம் கோவில்பட்டியில் கழிந்தது. பிள்ளைப் பிராயத்தில் எல்லாமே புதுமைகளாய், விந்தைகளாய், வேடிக்கையுறக் கண்டு மகிழ்வதற்குரிய விஷயங்களாகவே காட்சி தருகின்றன. மனம் அவற்றை பசுமையாய் பதிவு செய்து கொள்கிறது. கோவில்பட்டியில் நாங்கள் வசித்த பகுதி, தெருப்பெயர் போன்றவை நினைவில் பதியவில்லை. நாங்கள் குடியிருந்தது ஆனந்தம்பிள்ளை வீட்டு வளைவு, கொல்லம் ஒடு வேய்ந்த வீடுகள் வரிசையாக இருந்தன. விசாலமான அறைகள், தார்சா என வசதியான பகுதிகள் கொண்ட மட்டப்பாவு வீட்டில் நாங்கள் இருந்தோம். வீட்டுக்காரர் பக்கத்து வீட்டில் குடியிருந்தார். வீட்டில் முன்புறம் சுவரைஒட்டி அவரைக்கொடி அதே இனத்தைச் சேர்ந்த மூக்குத்திக்காய் கொடி எனப் பசுமையாக செடிகொடிகள் படர்ந்திருந்தன. பூக்களும் காய்களும் செழிப்பாகக் காணப்பட்டன. சாயங்கால வேளைகளில், முன்வாசல் படிக்கட்டில் நானும் தம்பியும் பக்கத்துவிட்டுச் சிறு பெண்ணும் அமர்ந்து தெருவோடு போகிற ஆள்களை, வண்டிகளை, நாய்களை எல்லாம் வேடிக்கை நிலைபெற்ற நினைவுகள் # 35
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/35
Appearance