உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடம் போய் வருவது சந்தோஷமான அனுபவமாகத் தான் இருந்தது. அந்த ஆண்டின் இறுதியில் நாங்கள் மீண்டும் ராஜ வல்லிபுரம் , சேர்ந்தோம். சென்ற முறை போய் தங்கிவிட்டு வந்தபோது, அந்த வீட்டை அடைத்துப் பூட்டிவிட்டு வரவில்லை. அம்மாவின் உறவுமுறைப் பெண்கள் இருவர் அங்கு வாடகைக்குக் குடியிருக்க வந்து சேர்ந்தனர். இம்முறை ஊரில் சில மாதங்கள் தங்கியிருப்பது, வீட்டை விஸ்தரித்து புதிய பகுதிகள் கட்டுவது என்ற திட்டம் இருந்தது. அதனால் வீட்டில் குடியிருந்த அம்மாள்கள் வேறு வீடு பார்த்துக் கொண்டு போக நேரிட்டது. 熙 6 路 ராஜவல்லிபுரம் சைவர்களின் உறைவிடம். அவர்கள் சிவனை வழிபட்டார்கள். ஊரில் பெரிய அளவிலான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இறைவன் பெயர் அக்னிஸ்வரர், அம்மன் பெயர் அகிலாண்டம் ஊர் மக்களிடம் ஈஸ்வரனைவிட அகிலாண்டநாயகிதான் அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தாள். அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அகிலாண்டம் என்று பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பெயராகவே அது விளங்கு கிறது. எனவே, ஊரில் அகிலாண்டம்கள் அதிகம் ஊருக்கு உடபுறத்தில் தனித்து ஒரு காளி கோயில் உண்டு சிறு கோயில் தான். ஆயினும் சக்தியுள்ள தெய்வம் என்று பெயர் பெற்றுள்ளது. தேவியின் பெயர் வலதி அம்மன். வலபூதி அம்மன் என்று எழுத்தில் குறிப்பிடுவர். தேவமார் (மறவர்), கோனார் மற்றுமுள்ள இதர இனத்தவர் தங்கள் பிள்ளைகளுக்கு வலதி என்று பெயரிடும் மரபு உள்ளது. இதுவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயர்தான். எனவே அவ்வூரில் வலதி எனப் பெயர் பெற்றவர்க்ளும் அதிகம் உள்ளனர். இவை போக, கோபாலகிருஷ்ணன் என்ற பெயருடையவர்கள் அதிகம் இருந்தார்கள் அங்கு இதற்கு விசேஷமான காரணம் உண்டு. நிலைபெற்ற நினைவுகள் : 39