உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் எதிர்பாராத காரியம் நடந்தது. கோபாலகிருஷ்ணன் திருஉருவத்தின் அருகில் அமைதியாய் சுருண்டு கிடந்த நாகம் வேகமாக முன்னே வந்தது. அந்தத் தாயை ஒருமுறை சுற்றியது. சத்தியம் செய்வது போல டம்ளர் பாலில் தனது வால் நுனியால் அடித்தது. அவள் முன் தலை தாழ்த்தி வணங்குவது போல் செய்துவிட்டு, சர்ரென நகர்ந்து வாசல்படி வழியாக வெளியேறி விர்ரென ஒடி மறைந்தது. அது எப்படிப் போயிற்று எங்கு போயிற்று என்று அவள் கவனிக்கவில்லை. அவள் விதிர்விதிர்த்து, சாமி, கோபாலா என்று முனகியபடி, பிள்ளையை ஆவிச்சேர்த்து அனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வீட்டு ஐயா குளித்து விட்டு வந்தவர், மனைவி இருக்கிற நிலையைக் கண்டு பதறினார். என்னவோ நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொண்ட அவர் என்ன விஷயம், ஏன் இப்படி குறுகுறுன்னு உட்கார்ந்திருக்கிறே என்று கேட்டார். அவள் நடந்ததைச் சொன்னாள். பாம்பு பாலில் வாலால் அடித்துவிட்டுப் போனதையும் தெரிவித்தாள். அவருக்கு ஆத்திரம் பொங்கியது. அடி பாவி, கெடுத்தியே கேட்டை தெய்வமாக வந்து மனைப் பாம்பாகக் காவல்காத்துக் கொண்டிருந்த ஒரு ஜீவனை இப்படி பழிசொல்லி விரட்டியடிச்சிட்டியே! அது தொட்டிலை ஆட்டியிருக்குமே தவிர, பிள்ளையை கொத்த வந்திருக்காது. இப்ப சாமி கோபம் ஏற்பட்டுவிட்டதே என்று புலம்பினார். ஒரு மாதிரியாக பூஜையை முடித்துவிட்டு, தோட்டம் பக்கமெல்லாம் சுற்றி, கோபாலா கோபாலா என்று கூவியபடி அலைந்தார். பாம்பு அவர் கண்ணில் படவேயில்லை. அவர் சாப்பிடாமல், வருத்தத்தோடு கோபால்சாமி முன்னேயே வெறும் தரையில் படுத்து விட்டார். மனைவி சாப்பிட அழைத்தும் அவர் மனம் தன்னை அறியாமலே அவர் துங்கிவிட்டார். அப்போது கனவில் பழைய முனிவர் தோன்றினார். அன்பனே, கவலைப்படாதே. வருத்தப்பட வேண்டாம். தாய் தனது பிள்ளைக்காகப் பயந்து குறைகூறியது இயல்பு தான். வீட்டுக்குள் பாம்பு இருந்தால் யாரும் பயப்படத்தான் செய்வார்கள். பாம்பினால் உனக்கோ, குழந்தைக்கோ, உன் குடும்பத்துக்கோ எந்த விதமான தீங்கும் நேராது. அந்தப் பாம்பு யார் கண்ணிலும் படாமல் மனைக்காவலாக இருக்கும். நீ வழக்கம் போல் பூஜை செய்து வா என்று அருள்புரிந்து விட்டு மறைந்தார். 44 : வல்லிக்கண்ணன்