உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 % நிலைபெற்ற நினைவுகள் எழுதுவது, தேவையான இடங்களில் சித்திரங்கள் தீட்டுவது, மீதிப் பக்கங்களும் நானே எழுதுவது என்று பத்திரிகையை உருவாக்கினேன். சங்க வாலிபர்கள் இதழை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள், பாராட்டினார்கள். ஐந்தாவது இதழுக்கு யாரும் எழுதித்தரவில்லை. நானே முழுவதும் எழுதினேன். இது தேவையில்லாத அதிகப்படியான வேலை என்ற எண்ணம் என்னுள் வளர்ந்துவந்தது. சங்கத் தலைமைப் பொறுப்பும் எனக்கு வீண்சுமை என்றே பட்டது. இரண்டையும் விட்டுவிடுவதுதான் நல்லது என்று என் மனம் சொன்னது. இந்த நிலையில் நெல்லை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழா கொண்டாடுவது என்று உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள் விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தார்கள். வழக்கமாக சங்கக் கூட்டம் சம்பந்தர் தெருவில் இருந்த ஒரு வீட்டின் மாடியில் கூடும். சங்க வாலிபர்கள் பேசுவதுடன், வெளியிலிருந்து பள்ளித் தமிழாசிரியர்கள் மற்றும் சில பெரியவர்களை அழைத்து வந்து பேசச் செய்வார்கள். ஆண்டு விழாவை வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக சொல்லின் செல்வர் ராபி. சேதுப்பிள்ளையை அழைக்கலாம் என்று ர்மானிக்கப்பட்டது. 露 அறிஞர் சேதுப்பிள்ளையின் சொற்பொழிவு என்றால் கேட்பதற்குக் கூட்டம் சேரும். ஆகவே மந்திரமூர்த்தி உயர் நிலைப்பள்ளி நிர்வாகிகள், அரங்கத்தைக் கொடுத்து உதவ இசைந்தார்கள். 1941 டிசம்பர் மாதம் ஒரு நாள் நெல்லை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்காக நல்ல முறையில் அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கப்பட்டிருந்தது. அழைப்பின் முதல் பக்கத்தில், “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!’ எனும் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகளை அச்சிடச் செய்தேன். நான்காம் பக்கத்தில், பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள் ஏச்செல்லாம் தமிழினிலே ஏசுங்கள்' என்று அச்சிடப்பட்டது. விழாவுக்கு, எதிர்பார்த்தபடி, அதிகமான அன்பர்கள் வந்திருந்தார்கள். முறைப்படி விழா தொடங்கி நடந்தது. நான்