பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

காலையிலும் அவன் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவான். கோயிலிருந்து வெளிவரும்போது கோயில் வாசற்படியில் அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிச்சைக்காரர் கூட்டத்திற்குத் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுப்பான். நாள்தோறும் அவன் இவ்வாறு தாராளமாகத் தருமம் செய்து வந்தபடியால் பிச்சைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் அவனுடைய கொடையைப் பாராட்டி ஆண்டவனைச் சாட்சிக்கு அழைத்து இவ்வாறு கூறுவார்கள். "ஏழு தங்கப் பசு மன்னரே! இந்த உலகத்திலேயே உம்மைப் போன்றவர் வேறு யாருமில்லை உமக்காக நாங்கள் நீரிலும் குதிப்போம்; நெருப்பிலும் குதிப்போம்!"

ஒவ்வொரு நாள் மாலையிலும் ஏழு தங்கப் பசு மன்னன் தன் நண்பர்களை அழைத்து வந்து விருந்து வைப்பான். நகரில் உள்ள பிரபுக்களும், பெரிய பெரிய வியாபாரிகளும் பணக்காரர் எல்லோரும் அவன் நட்பைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு மிகச் சிறந்த சாப்பாடு அளித்து உயர்தரமான பான வகைகளும் குடிக்கக் கொடுத்து கோலாகலமாக விருந்தை நடத்துவான் அரசன். விருந்து முடிந்து வீடு திரும்பும் போது வருகின்ற ஒவ்வொரு விருந்தாளியும் ஒரு சிறந்த வெகுமதிப் பொருளாவது பெறாமல் திரும்புவதில்லை! ஆகவே, அவர்கள் ஒவ்வொருவரும் அவனுடைய தாராள குணத்தைப் பாராட்டி ஆண்டவனைச் சாட்சிக்கு அழைத்து இவ்வாறு கூறுவார்கள்; "ஏழு தங்கப் பசு மன்னரே, இந்த உலகத்திலேயே உம்மைப் போன்றவர் வேறு யாருமில்லை; உமக்காக நாங்கள் நீரிலும் குதிப்போம்: நெருப்பிலும் குதிப்போம்!”

ஒரு நாள் ஒர் இளைஞன் அரண்மனைக்கு வந்து அரசரைக் கண்டு பேச அனுமதி கேட்டான். அவன் ஏழு தங்கப் பசு மன்னனின் முன் வந்தபோது, “அரசே! நான் தங்களுடைய தாராள குணத்தைப் பற்றிக் கேள்வி ப்பட்டுத் தங்களிடம் ஒர் உதவி கேட்பதற்காக வந்திருக்கிறேன். இந்த நகரத்திலேயே