உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகரவரிசைப்படி ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதல்வர், ஆணையில் கண்டுள்ளபடி முறையே ஒவ்வொரு நூலையும் வாசிக்கவும் மற்றொருவர் அந்நூலை எடுத்து ஆணையில் குறித்துள்ளபடி எல்லா வகையானும் ஒத்திருக்கின்றதா என்பதைக் காணவேண்டும். இவ்வாறே ஒவ்வொரு நூலையும் சரிபார்க்க வேண்டும். இத்துடன் விலைச் சீட்டினையும் நன்கு கவனித்தல் இன்றி மையாததொன்றாகும். ஒரு நூலைப் பற்றிய விவரங்கள் யாவும் சரியாக இருந்தால் அதற்குரிய அட்டையினை அங் நூலினுள் வைத்துவிட்டு, விலைச்சீட்டில் அந்நூலிற்கு எதிரே ✓ என்று குறியீடு செய்தல்வேண்டும். சரியில்லாத நூல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு வேலை முடிந்ததும், அவற்றை உடனடியாக விற்பனையாளருக்கு அனுப்புதல் நூலகத்தார் கடமையாகும்.

2. நூல்களைச் சரிபார்த்தல் (Collation)

அடுத்து ஒவ்வொரு நூலும் சரியாக ‘நூல்வடிவாக்கம்’ (Binding) கொண்டதாயுள்ளதா, பக்கங்கள் சரியாக உள்ளனவா, அவைகள் ஒழுங்காக வைத்துத் தைக்கப் பட்டுள்ளனவா, தாள்கள் தலைமாறி இல்லாது சரியாக இருக்கின்றனவா, நூலில் குறித்துள்ளபடி படங்கள், நாட்டுப்படங்கள் முதலியன சரியாக இருக்கின்றனவா, சரியான முறையில் நூல் அச்சடிக்கப்பட்டுள்ளதா போன்ற பல விடயங்களை உற்று நோக்குதல் வேண்டும். நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் சரிபார்த்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகும். மேலும் நம் பொறுமையைச் சோதிக்கவும் செய்யும். நூல்கள் பல அளவுகளில்

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/42&oldid=1111775" இலிருந்து மீள்விக்கப்பட்டது