உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வற்றை அவற்றிற்குரிய இடங்களில் ஒழுங்காகவும் அழுக்குப்படாமலும் ஒட்டுதல் வேண்டும். அட்டைப் பையினை நூலின் மேல் அல்லது கீழ் அட்டையின் உட்புறத்தில் ஒட்டலாம். இதனுள் நூல் - அட்டையினை (Book Card) வைக்க வேண்டும். நூல் அட்டையானது நூலின் பெயர், அதன் ஆசிரியர், வகைப்படுத்திய எண், வரிசை எண் என்பவற்றைக் கொண்டிலங்கும். நாள் சீட்டினை நூலின் உட்புறத்தில் முதல் தாளில் ஒட்ட வேண்டும். இவற்றின் பயனைப் பிறகு கூறலாம். வட்டச் சீட்டினை ஒவ்வொரு நூலின் முதுகின் (Spine) கீழ்ப்பகுதியில் ஒட்டவேண்டும்.

6. நூல்களை வகைப்படுத்தல் (Classification)

பொருள் வாரியாக நூல்களைப் பிரித்து, அதன் பின்னர் அதற்குரிய எண்களை வழங்குதலே நூல்களை வகைப்படுத்தல் (Classification) ஆகும். நூல்களை வகைப்படுத்தும் முறைகள் (Systems) எத்தனையோ உள்ளன. ஒவ்வொருவரும் அவரவரது விருப்பம் போல் எந்த முறையினையேனும் கடைப்பிடிக்கலாம்.

7. நூற்பட்டியல் தொகை எழுதுதல் (Cataloguing)

நூல்களை வகைப்படுத்தியதும், வகைப்படுத்திய எண்ணை நூலின் தலைப்புப்பக்கத்தின் பின்புறத்தில் நடு மையத்தில் பென்சிலால் எழுதவேண்டும். இதன் பின்னர் நூற்பட்டியல் தொகைக்குரிய அட்டைகளை எழுத வேண்டும். அட்டைகளை எழுதுங்கால் அதற்குரிய விதிகளை மனத்திலே கொள்ளவேண்டும். சில நூலகங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/45&oldid=1111778" இலிருந்து மீள்விக்கப்பட்டது