பக்கம்:நூலக ஆட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அலுவலகத் தலைவருக்கோ செயலாளருக்கோ அனுப்புதல் வேண்டும்.

4. முத்திரையிடுதல் (Stamping)

நூல்களைப் பதிவுசெய்து முடிந்ததும் நூலக அடையாள முத்திரையினை (Library Seal) முதலில் நூலினது தலைப்புப் பக்கத்திலும் (Title Page) இறுதிப் பக்கத்திலும் இடுதல் வேண்டும். மேலும் இடையிடையே சில பக்கங்களிலும், அட்டைகளிலும், அட்டவணைகளிலும், படங்களிலும் முத்திரையிடுதலும் உண்டு. இதனை நூல் சீட்டுக்கள் ஒட்டும்பொழுது செய்து கொள்ளலாம்.

முத்திரையில் நூலகத்தின் பெயரும், ஊரும், அதனது மையத்தில் பதிவெண், நாள் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றின் கீழ் ஒன்றாய் பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பதிவெண்ணும், நாளும் அவைகளுக்கு நேராக முத்திரையின் மையப்பகுதியில் முத்திரையிட்டபின் நாம் எழுதுதல் வேண்டும். தலைப்புப் பக்கத்தில் மாத்திரம் முத்திரையில் இவ்வாறு எழுதவேண்டும்.

5. நூலின் தாள்களை ஒழுங்குபடுத்தல் (Cutting)

சில நூல்களில் தாள்கள் முறையாக வெட்டப்படாமலிருக்கலாம். சில தாள்கள் ஒன்றினோடு ஒன்று ஒட்டிக்கொண்டும் இருக்கலாம். இவ்விதம் காணப்படும் ஒழுங்கற்ற தாள்களை முறைப்பட அளவொடு வெட்டிச் சரிப்படுத்தவேண்டும். இதன் பின்னர் நூலில் ஒட்டப்பட வேண்டிய நூல்பை (Book-Pocket), நாள்சீட்டு (Date slip), வட்டச் சீட்டு (Round Lable) முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/44&oldid=1111777" இலிருந்து மீள்விக்கப்பட்டது