உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வரிசை எண் :
4. வகைப்படுத்திய எண் :
5. முத்திரையிட்டவர் :
6. நூற்பட்டியல் தொகை எழுதியவர் :
7. ஒழுங்கற்ற தாள்களைச் சரிப்படுத்தியவர் :
8. சீட்டு முதலியன ஒட்டியவரின் பெயர் :
9. இவற்றைச் சரிபார்த்தவரின் பெயர் :

மேற்கூறியவற்றை அட்டைகளில் எழுதிவைக்கலாம்; அல்லது இவ்விளக்கங்கள் பொறித்த முத்திரை ஒன்றினைச் செய்து, நூலின் இறுதிப் பக்கத்தில் இம்முத்திரையினை இட்டு, அதில் காணும் தலைப்புக்களுக்குரியவற்றை அவற்றிற்கு நேரே எழுதிக் கொள்ளலாம். இம்முறைப்படி யாவும் செய்து முடித்த பின்னர், நூல்களைப் படிப்பதற்காக அலமாரிகளில் அடுக்கி வைத்துவிடலாம்.

நூல்களை அலமாரிகளில் அடுக்கிவைத்தல்

நூல்கள் பயன்படவே அதாவது படிப்பதற்கே உள்ளன. அலமாரிகளை அழகுபடுத்துவதற்காக நூல்கள் வாங்கப்படவில்லை. ஒரு நூல் விலை உயர்ந்தது என்றோ, அது காணாமற் போய்விடும் என்றோ, அழுக்குப் பட்டும் சிதைந்தும் போய்விடும் என்றோ, அதனைப்பூட்டி வைத்தல் தவறானதாகும். நூலகத்திற்கு வருவோர் பிறர் உதவியின்றி உளம் விரும்பிய நூல்களோடு உறவாட வேண்டும் என்ற உயரிய நோக்கம் நூலகத்தாருக்கு இருத்தல் வேண்டும். இதற்கு வழி வகுப்பது ‘விரும்பிய வண்ணம் படிக்கும் நூலக முறை’யேயாகும் (Open

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/47&oldid=1111780" இலிருந்து மீள்விக்கப்பட்டது