உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலக ஆட்சிப்’ பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

ஒன்பது தலைப்புக்களில் நூலக அலுவல்களைக் குறித்து ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார். நூலகப் பணியில் ஈடுபட்டுள்ளோரது அன்றாடப்பணிகளும், அவர் தம் திறனும், ஊதிய வகையும் இன்ன பிறவும் முதலில் ஆசிரியரால் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. அடுத்து நூலகத்திற்குப் புதிய நூல்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு தேர்ந்து எடுத்த நூல்களை விற்பனையாளர்களிடமிருந்து எவ்வாறு பெறுதல் வேண்டும் என்பதும், நூலகத்திற்கு வாங்கிய புதிய நூல்களைத் தொகைவகை விரி செய்து காண்போர் கருத்தைக்கவரும் வண்ணம், வருவோர் தம் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் தட்டுகளில் எவ்வாறு அழகுற அடுக்கிவைத்தல் வேண்டும் என்பதும் ஆராயப்பெற்றுள்ளன. பின்னர் நூல் வழங்கு முறை, நூலக விதிகள், நூலக ஆண்டறிக்கை போன்ற பல தலைப்புகளிலே நல்ல பல கருத்துக்களை ஆசிரியர் நயம்பட எழுதியுள்ளார். நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் நூலகச் சொற்பட்டியல் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன்படும் என்பது என் கருத்து.

தமிழ் நாட்டில் நூலகத் துறையில் ஈடுபட்டுள்ளோரை ஊக்கப்படுத்துவதோடு, பொது மக்களுக்கும் நூலகக் கலையினை விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்நூலைத் தமிழகம் படித்துப் பயனடையும் என்று நம்புகிறேன். நூலாசிரியர் நீடு வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/7&oldid=1110330" இலிருந்து மீள்விக்கப்பட்டது