பக்கம்:நூலக ஆட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நூலைப்பற்றி

நூலகம் - அறிவு மன்றமான இதுதான் நம்நாட்டு ஆயிரமாயிரம் மக்களின் ஆவலையும், அறிவு வேட்கையையும் தீர்த்து, மக்கட்குலம் உய்ய, உயர, பணிபுரிந்தாக வேண்டும். நேற்றைய சிறப்புக்களை ஆய்ந்து, இன்றைய தேவைகளை அறிந்து, நாளைய உயர்வுக்கு வழிகாட்டவேண்டும்.

அத்தகு நூலகம் சிற்றளவினதாயினும், பேரளவினதாயினும் பொது அமைப்பு முறையும் நிர்வாக முறையும் திறமையான வகையில் அமையவேண்டும். அப்பொழுதுதான் நூலகப் பணிக்காகச் செலவழியும் பணமும் பணியும் பயன் தருவனவாகும்.

வளர்ந்துவரும் தாய்மொழியில் - தமிழில் - புதிய துறையாம் நூலகவியல் விளக்கம் நல்ல இடம் பெறவேண்டும். அப்பணியில் ஒரு பகுதியாம் நூலக ஆட்சியை முறையே தொகுத்து, விரித்து, இனிமையாக, எளிமையாக, நல்ல தமிழில் முதன்முறையாகத் தந்திருக்கிறார் நண்பர் திருமலை முத்துசாமி அவர்கள்.

நல்ல தமிழ்ப் பற்றும், பயிற்சியும், ஆசிரியப் பயிற்சியும், நூலகப் பயிற்சியும் ஒருங்கமைந்து கல்லூரி நூலகத் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்புப்பெற்றுள்ள நண்பர் எழுதியுள்ள நூலக ஆட்சி நல்லதொரு நூலகப் பணியாகும்.

அப்பணியைத் தொடங்கியுள்ள நண்பர் மேலும் பல நூல்களைத் தர முன்வர வேண்டுமென விழைகிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்            வே. தில்லைநாயகம்
        கழகம்  
   அண்ணாமலைநகர்                துணை நூலகத்துறைத் தலைவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/8&oldid=1110331" இலிருந்து மீள்விக்கப்பட்டது