22
நெருப்புத் தடயங்கள்
தாங்கள் நினைத்த நினைப்பும், தவித்த தவிப்பும் நினைப்பிற் தரிய அடுத்த தரப்பிற்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறார்கள் , ‘அது’ தெரியாமல் விழிக்கும்போது, ‘பெரிய மனிதத்தனம்’ போர்வையாகி விடுகிறது.
இப்போது, அந்தப் போர்வையை விலக்கியவள் போல் தமிழரசி நடந்தாள். “தாமு... தாமு” என்று மெல்லச் சொல்லியபடியே நடந்தாள். சத்தம் கேட்காமல் திரும்பாதவள், முதுகில் யாரோ குத்துவதைப் பார்த்துத் திரும்பினாள்.
கலாவதி, தன் தோளில் ஒரு துண்டு துலங்க சிரித்தாள். தமிழரசி ஒப்புக்கு “பொன்மணி வரலியா” என்ற போது, கலாவதி, “வர்ல... இப்போ வரவும் மாட்டாள்” என்றாள் திட்டவட்டமாக.
இருவரும் வருவதைப் பார்த்ததும், சட்டையைக் கழற்றிய தாமோதரன், அவசர அவசரமாக அதைப் போட்டான். வேறு கிணற்றைப் பார்த்து நடக்கப் போனவன், பிறகு அங்கேயே செக்கு மாடு மாதிரி சுற்றிச் சுற்றி வந்தான்.
‘பதினோராவது வகுப்பு’ தமிழரசி, உதவிப் பேராசிரியையாகி, அவனைப் பார்த்துக் கும்பிட்டாள், அவனும் பதிலுக்கு சல்யூட் அடிப்பது போல், வலது கரத்தைத் தூக்கினான். பேச்சு இப்படிப் போனது:
“எப்டி இருக்கீங்க...”
“எப்டி இருக்கீங்க...”
“மெட்ராஸ் எப்டி இருக்கு?”
“மண்டைக்காடு எப்டி இருக்கு?”
“எப்போ புரமோஷன்?”
“ஒங்களுக்கு எப்போ?”
மேற்கொண்டு எப்படிப் பேசுவது என்று தாமோதரனுக்குத் தெரியவில்லை. அதே சமயம் ஒரு உதவிப்-